தமிழ் திரை உலக வரலாற்றில் த்ரில்லர் படங்களுக்கென ஒரு தனி இடம் உண்டு. கருப்பு வெள்ளை படங்களிலிருந்து, கலர் படங்கள் வெளிவந்த வரைக்கும், ஒவ்வொரு காலகட்டத்திற்கு தகுந்தாவறு திகல் படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ஆதியும் அந்தமும் திரைப்படமும், ரசிகர்களை பயமுறுத்த வந்துள்ளது.
அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது.
எனவே, அந்த மருத்துவமனையில் ஏதோ ஒரு தவறு நடப்பதாக உணர்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குகிறார்.
அதே வேளையில் கல்லூரியில் ஒரு டிவி நிகழ்சிக்காக தங்கும் காம்பியருக்கும் அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்துகொள்கிறார்.
இதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்பு உருவானதால் கல்லூரி நிர்வாகத்தின் மேல் சந்தேகப்படுகிறார்கள். இந்நிலையில் அஜய், காணாமல் போக கல்லூரி முதல்வர்தான் காரணமென அவரிடம் போய் கேட்கிறார் காம்பியர்.
சைக்கலாஜி துறையில் பேராசிரியர் அஜய் (கரண்) திரும்ப கிடைத்தாரா?
கல்லூரி நிர்வாகத்தினர் அவரை ஏன் தடுத்தார்கள்?
அந்த ஆவியின் பின்னணி என்ன? எதற்காக அப்படி நடமாடுகிறது?
ஆவி பேராசிரியருக்கு மட்டுமே தெரிகிறது ?
என்பது போன்ற பல கேள்விகளுக்கு suspense உடன் திரையில் பதில் திரைக்கதையாக விரிகிறது. அதுதான் ‘ஆதியும் அந்தமும்’ திரைப்படம்.
இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் பட்டையைக் கிளப்புகிறது. இரண்டாம் பாதி படம்தான் கொஞ்சம் ஜவ்விழுப்பு....
இரண்டாம் பாதி தொடங்கிய சில நொடிகளிலேயே மர்ம முடிச்சை அவிழ்த்து விடுகின்றனர். அதன்பின் சலிப்பேற்படுத்தும் வகையில் நீண்ட Flash-Back வருகிறது படத்தில்.
இதை சுருக்கியிருந்தால் இரண்டாம் பாதி தொய்வினைக் குறைத்திருக்கலாம். இடையில் நாயகன் நாயகி டூயட் வேறு வருகிறது. இது படத்திற்கு எந்த ஒரு தொடர்பில்லாமல் இருக்கிறது.
டாக்டர் கரண் பாத்திரம் இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது. திரைக்கதையின் பலவீனத்தால் மித்தாலி அகர்வாலுடனான காதல் காட்சிகள் படத்துடன் ஒட்டாமல் உள்ளது.
படத்தில் ஒலி ஒளியைத் தவிர்த்து மிரட்டும் இன்னொரு நபர் யுவான் சுவாங். அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது அவரது பாதி முகத்தில் தெரியும் ஒளியும் பாவனைகளும் கூட திரில்லிங்கை உண்டாக்குகிறது.
டி.வி. தொகுப்பாளினியாக வரும் கவிதா ஸ்ரீனிவாசனும், ஹாஸ்பிட்டல் சீஃப்பாக வரும் ராமநாதனும் சூப்பராக நடித்துள்ளனர்.
L.V.கணேசனின் Background Music -ம், D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம்.
கெளஷிக்கின் முதல் படமிது என சொல்லவே முடியாது. கதாபாத்திரத் தேர்வு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம், படத்தின் முதற்பாதி திரைக்கதை, படத்தின் எதிர்பாராத முடிவு என இயக்குநராக கெளசிக் ஜெயித்துள்ளார்.
மொத்தத்தில் ஆதியும் அந்தமும் திகிலான திரைப்படம். த்ரில்லுக்கு பஞ்சமில்லை.
0 comments
Post a Comment