Thursday, 27 March 2014

சைஸ் ஜீரோ அழகியான ஸ்ரேயாவை கழற்றிவிட்ட பாலா

கரகாட்டக் கலையை மையப்படுத்தி எடுக்கப்படும் படம்  "தாரை தப்பட்டை".

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் ஸ்ரேயாதான்.

தமிழில் சுத்தமாக வாய்ப்புகளே இல்லாத நிலையில், பாலா பட வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தார் ஸ்ரேயா.
Shreyavai-kalativitta-bala


இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் பட உலகில் இன்னொரு ரவுண்ட் வரும் கனவோடு, சென்னையிலேயே கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தார் ஸ்ரேயா.

ஆனால் திடீரென 'சைஸ் ஜீரோ' அழகியான ஸ்ரேயாவை கழற்றிவிட்ட பாலா, சரத்குமார் மகள் வரலட்சுமியை ஹீரோயினாக்கிவிட்டார்.

கரகாட்ட கலைஞருக்கான பாடி லாங்குவேஜ் வரலட்சுமிக்கு சரியாக இருந்ததாலேயே அவரை ஹீரோயினாக்கியதாக பாலா தரப்பில் சொல்கிறார்கள்.

இந்த செய்தி கேட்டதிலிருந்து ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம் ஸ்ரேயா. நல்ல வாய்ப்பு போயிடுச்சே.. இது யாரோட சதியா இருக்கும் என புலம்புகிறாராம்.

பாலா - இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments

Post a Comment