Thursday, 27 March 2014

கோலிவுட் கிங் விஜய்

தமிழ் திரைபட உலகில் பல முன்னணி ஹீரோக்கள் இருந்த போதிலும், கோலிவுட் கிங் நடிகர் விஜய்தான்.

ரஜினி, கமல், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்கள் அவரவர்களின் பாதையில் கலக்கிக்கொண்டிருந்தாலும், ரஜினிக்கு அடுத்தப்படியாக கோலிவுட்டில் அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பவர் விஜய்தான்.

மற்ற நடிகர்கள் பிலிம்பேர் போன்ற சிறந்த நடிகருக்கான விருதுகள் வாங்கியிருந்தாலும், இவ்விருதை பெறாத விஜய் எப்படி கோலிவுட் கிங் ஆனார்?
koliwood-king-vijay
இதற்கு காரணம் உண்டு. தென் இந்தியாவைப் பொறுத்தவரை இணைய தேடலில் மற்ற நடிகர்களைவிட, விஜய் பற்றிய தேடலே அதிகமாக இருக்கிறது என முன்னணி தேடுதளம் கூகிள் தெரிவித்துள்ளது.

எந்திரன் படத்தின் மூலம் ரஜினிகாந்த் ஒரு பாக்ஸ் ஆபிஸ் பேரரணர் என்று அழைப்பட்டார். அதேபோல விஜய் துப்பாக்கி படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகிப் போனார். மற்ற நடிகர்களையும் தங்கள் ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் சேர்த்தாலும், விஜய்தான் ரஜினிக்கு அடுப்படியாக 100 கோடி கிளப்பில் நுழைந்த இரண்டாவது நடிகர் ஆவார்.

தற்காலத்தில் தமிழ் நடிகர்களில் அதிகளவு ரசிகர் வட்டம் கொண்டவர் விஜய் ஒருவர்தான் என்பதற்கு கூகிள் மற்றும் டவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்ளங்கள் அறிவித்துள்ளன.

நடிப்பு மட்டுமல்லாது, தனது நடனம், பாட்டு, நகைச்சுவை, சண்டை போன்றவைகளிலும் மிகவும் கவனம்செலுத்தி ரசிகர்களை கவர்வதில் விஜய்க்கு நிகர் விஜய்தான்.

எப்படியென்றால் துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் பாடல், தலைவாவில் வரும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லாவின் கண்டாங்கி பாடல் என ஒவ்வொரு படத்திலும், பாடலானாலும் சரி, நடனமானாலும் கலக்கிக்கொண்டிருப்பவர் விஜய்.

பொதுவாகவே விஜய் படங்கள் நிறைய விமர்சிக்கபடும். அந்த விமர்சனங்கள் மிக மோசமானதாக இருக்காது. ஒன்று நல்லபடியாக உள்ளது என்றோ அல்லது சரியில்லை என்றோ சொல்லபடுமே தவிர, குப்பை என எந்த படத்தையும் ஒதுக்கியதிலை.

தனது நடனம், மற்றும் தனிப்பட்ட ஸ்டைலின் காரணமாக உலக ரசிகர்களை கட்டுப்போட்டிருக்கும் விஜய்தான் கோலிவுட் கிங் என்பதில் சந்தேகமில்லை.
சினிமா விமர்சகர்களும் தனிப்பட்ட முறையில் கோலிவுட் சினிமா உலகத்தில் கிங் விஜய்தான் என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.

0 comments

Post a Comment