Tuesday, 4 March 2014

8 பேக்ஸ் உடற்கட்டில் அஜீத்

நினைத்தவுடன் உடலை படத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றவர் நடிகர் அஜித் அந்த வகையில் கௌதம் மேன்ன் இயக்கும் படத்தில் 8 பேக்ஸ் உடற்கட்டில் மிரட்ட வருகிறார் நடிகர் அஜீத்.

வீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித் கௌதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கௌதம்மேனன் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது.

ajith-in-8-packs-jim-body-for-goutham-menon-film


இப்போது சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் கௌதம்மேனன் இணைந்திருக்கிறார். கௌதமுக்கே உரிய ஸ்டைலில் இந்தப் படம் தயாராக இருப்பதால் மேக்கப் மேன், டான்ஸ் மாஸ்டர்கள் என அனைத்து டெக்னீஷியன்களும் ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் லாபம் படத்தை தயாரிக்கும் ஏ.எம்.ரத்னத்தின் கடன் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுபட உதவும் என்பதால் தான் அஜித் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.

மேலும், இயக்குனர் கெளதம் மேனனுக்கும் ஒரு வகையில் உதவவேண்டும் என்ற நோக்கமும் அஜித்துக்கு உள்ளதால் தான் அவரையே இயக்குனராக்கி இருக்கிறார் என்கிறார்கள். அதனாலேயே தனது கால் அறுவை சிகிச்சையைக் கூட தள்ளிப்போட்டு விட்டாராம்.

மேலும் அஜித் இந்தப் படத்துக்காக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றி இளமையாக காட்சியளிக்க உள்ளார். இதற்காக தினமும் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சியும் செய்கிறார். அதன் பலனாக கிட்டதட்ட 7 கிலோ எடையை குறைத்துவிட்டாராம்.

முன்னதாக ஆரம்பம் படத்திற்காக அவர் ஜிம்முக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையில் இதுவரை சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்தான் சிக்ஸ் பேக்ஸ் வைத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அஜித் இவர்களையும் தாண்டி 8 பேக்ஸ் வைக்கிறாராம். போலீஸாகவும் கலக்க இருக்கிறாராம்.

அஜித் ஜோடியாக மும்பையைச் சேர்ந்த நடிகை அறிமுகமாக இருக்கிறாராம். மங்காத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் அர்ஜூன் நடித்தது போன்று இந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல நடிகரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட பூஜை வரும் மார்ச் மாதம் 15ம் தேதி எளிமையாக நடைபெறுகிறது. அதை தொடர்ந்து படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. படத்தை வரும் தீபாவளி தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை உருவாக்கும் முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதலில் இசையமைப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தாலும், தற்போதுள்ள தகவல் படி அனிருத் தான் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

0 comments

Post a Comment