Wednesday, 5 March 2014

காஜல் அகர்கால் காதலனுடன் கொண்டாட்டம்

சினிமா பிரபலங்கள் கிசுகிசுக்களில் சிக்குவதும், பிறகு அதை மறுப்பதும் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வால் துபாயில் ஆண் நண்பருடன் சுற்றித் திரிந்த  படங்கள் இணையத்தில் வெளியாக பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த சில மாதங்களாகவே நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
kajal agarwal kathal kisu kisu
ஆனால் காஜல் அகர்வால் அதை மறுத்து இரண்டு வருடத்துக்கு பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். இப்போது திருமணம் பற்றி சிந்திக்க நேரம் இல்லை என்றும், எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

இந்நிலையில்தான் காஜல் அகர்வாலின் ரகசிய காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.துபாயில் மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. 

அந்த இளைஞர் மும்பையில் பிரபலமாக உள்ள உள் அலங்கார நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறாராம்.

காதலை ரகசியமாக வைத்துக் கொள்ள இங்கே சந்திப்பதை தவிர்த்து வெளிநாடு போய் இருக்கிறார்கள். அங்கு யாரோ ஒருவர் செல்போனில் அவர்களை படம் பிடித்து இணையத்தில் பரவவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அக்காவுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்துவதா என்று தெலுங்கு திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. 

அதை காஜல் கண்டு கொள்ளவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைதான் இந்த காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment