Thursday, 20 March 2014

இந்தியாவின் ருத்ரதாண்டவத்தை தாக்குபிடிக்குமா பாகிஸ்தான்..? இன்று உலக கோப்பை 20-20 கிரிக்கெட் முதல் போட்டி

ஐந்தாவது Twenty -20 உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இன்று ‘super–10’ சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் ‘பிரிவு-2’ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.  
 
உலக கோப்பை  ‘Twenty-20’ தொடரின் இன்றைய முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.  இதில் பரம எதிரிகளாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கடந்த  ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    
india-vs-pakistan-20-20-cricket-today-2014
கடந்த 2007ம் வருடம் நடந்த முதல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி, அதன் பிறகு பங்கேற்ற மூன்று தொடர்களிலும் அரையிறுதிக்கு செல்லாமல் திரும்பியது.

கடந்த ஆண்டு (2012) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ஆஸ்திரேலியா எதிராக தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

அரையிறுதி வாய்ப்பை எட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. காரணம் எதிர் அனிகள் வலிமையானவை. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என சரிசம பலமிக்க அணிகளை வீழ்த்த வேண்டும்.

இந்திய அணி பேட்டிங்கைத் தான் பெரிதும் நம்ப வேண்டியதுள்ளது. பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு சோடை போகும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றிக்கனவு கடினமாகிவிடும்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மீது தான் எதிர்பார்ப்பு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் பந்துவீச்சாளர்கள் சோர்ந்துபோவது கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. குறிப்பாக புவனேஸ்வரின் பந்துவீச்சு கடைசி கட்டத்தில் எடுபடவில்லை.

பயிற்சி போட்டியில் கலக்கிய ரெய்னா, இந்த போட்டியிலும் தனது பங்களிப்பை கொடுத்தால் இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட உதவும்.

மற்ற பேட்மேன்கள் யுவராஜ் சிங்கின் வருகையும் சற்று உதவும். இதேபோல கோஹ்லியும் நம்பிக்கை தருகிறார்.

தோனி, ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் கொண்ட பேட்டிங் பட்டாளம் அசத்தினால் வெற்றி எளிதாக இந்தியா வசப்படும்.

சளைத்தது அல்ல பாகிஸ்தான்: 

பாகிஸ்தான் பொறுத்தவரை பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. கடைசி கட்டத்தில் அநாயசமாக சிக்சர்களை விலாசி வெற்றியைத் தேடித்தர அப்ரிடி காத்திருக்கிறார்.

சோயப் மாலிக், கம்ரான் அக்மல் வருகையால் பாகிஸ்தானின் பேட்டிங் கூடுதல் பலம் பெற்றுள்ளது. தவிர, அக்மது ஷேசாத், கேப்டன் முகமது ஹபீஸ், உமர் அக்மல் போன்ற மிரட்டும் வீரர்களும் உள்ளனர்.

பாகிஸ்தான் டீமில் ‘ஆல் ரவுண்டர்கள்’

பவுலிங்கில் அனுபவ உமர் குல், சோகைல் தன்வீர், முகமது தல்கா என, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீசுவதில் அனுபவம் மிக்கவர்கள் இவர்கள்.

தவிர, சுழலில் சயீத் அஜ்மல் தலைமையில் ‘ஆல் ரவுண்டர்கள்’ அப்ரிடி, முகமது ஹபீஸ் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர்.

அதேநேரம், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான பயிற்சியில் 71 ரன்னுக்கு சுருண்ட சோகத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.

மழை இல்லை

போட்டி நடக்கும் மிர்புரில், இன்று வானம் தெளிவாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 34, குறைந்த அளவு 19 டிகிரி செல்சியசாக இருக்கும். மழைவர வாய்ப்பு இல்லை. எனவே போட்டி முழுவதையும் ரசிகர்கள் இடையூறு இல்லாமல் காண முடியும். 

0 comments

Post a Comment