மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான சால்ட் அன்ட் பெப்பர் என்ற திரைப்படம் தமிழில் உன் சமையல் அறையில் என்ற படமாக ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், சினேகா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க சமையல், சாப்பாட்டை மையப்படுத்தி வெளிவரும் நகைச்சுவை படம் இது.
தம்பி ராமையா, ஐஸ்வர்யா, ஊர்வசி போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க சிரிப்பு வெடிகள் வெடித்துச் சிதறப்போகிறது என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்துடன் பார்த்து, சிரித்து மகிழும் வகையில் அமைந்திருக்கும் இந்த படமான கோடை விடுமுறையில் மே மாதம் ரீலீஸ் ஆவதற்கு தயாராக இருப்பதாக இப்படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவையில் பின்னி எடுக்கும் பிரகாஷ்ராஜ் - சினேகா ஜோடி உன் சமையல் அறையில் படத்திற்கான சிறந்த ஜோடிதான்..!
0 comments
Post a Comment