Thursday, 20 March 2014

வித்தியாசமா இருக்கா? அப்ப ஓ.கே. தான் - 'அட்டகத்தி' நந்திதா

தான் நடித்த அனைத்து படங்களிலுமே, சிறப்பாக நடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்  'அட்டக்கத்தி' படத்தின் நாயகி நந்திதா.

முன்னணி ஹீரோக்களுடன் மட்டும் தான், நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், மனதை தொடும் வித்தியாசமான வேடங்களாக நடிக்கவே விரும்புகிறேன் என்கிறார் நந்திதா.

ரசிகர்களின் விருப்பமே எனது விருப்பம். அவர்களின் ரசனைக்கு விருந்து வைப்பதுதான் என்னுடைய கடமை..! என்கிறார்.
காதல், சென்டிமென்ட் என, உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளாக மட்டுமே நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருக்க ஆசைப்படுகிறேன்' என்கிறார்.

இதனால், 'நந்திதா, எல்லா கேரக்டருக்கும் பொருத்தமாக இருப்பார்' என, இயக்குனர்கள், அவரின் வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனராம்.

இப்போது அம்மணியின் கைவசம், இப்போது, ஏராளமான படங்கள் உள்ளன. இருக்காதே பின்னே?

அப்புறம் என்ன? வித்தியாசமான கேரக்டர் ரோல் கைவைசம் வச்சிருக்கிற டைரக்டர்களுக்கெல்லாம் ஒரே குஷிதான்..!

0 comments

Post a Comment