பாலிவுட் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் யு டியூப்பில் வெளியாகி பரபரப்பினைஏற்படுத்தியுள்ளது.
ஜாலி எல்.எல்.பி.என்ற இந்தி படத்தினை இயக்கி வருபவர் சுபாஷ்கபூர், இதில் கீதிகா தியாகி என்ற நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன் கீதிகாவிடம் இயக்குநர் சுபாஷ் கபூர், தவறாக நடந்து கொண்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை, சுபாஷ் கபூரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த காட்சிதான் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு தற்போது யு டியூப் சமூகவலை தளத்தில் அப்லோட் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதனை ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டது ஒரு நடிகர் என்பதும் தெரியவந்தது.
மும்பையைச் சேர்ந்தவர் கீதிகா தியாகி (24). பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி பிஷ், உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் சுபாஷ் கபூர் வீட்டில் அவரது மனைவியிடம் நடந்தவற்றைக் கூறி அழுகிறார் நடிகை. அதற்கு அவரது மனைவி சமாதானம் செய்கிறார். நான் செய்த தவறுக்கு என்னை அறைந்து விடு என்பது போல சுபாஷ் கபூர் கன்னத்தை காட்டுகிறார்.
இதனையடுத்து அழுது கொண்டே வந்து சுபாஷ் கபூரின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார் நடிகை கீதிகா. இதைத் தொடர்ந்து மேலும் அழுகிறார். இந்த காட்சிகள்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை கீதிகாவே வெளியிட்டார் என்றும் கூறப்படுகிறது. என்னை தவறான கண்ணோட்டதுடன் தொடும் எந்த ஆணையும் என்னால் மன்னிக்க முடியாது என்று கீதிகா தியாகி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சுபாஷ் கபூரின் மனைவிக்கும் கீதிகா நன்றி கூறியுள்ளார். தனக்கு அவர் ஆதரவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நீண்டகாலமாக தனது மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் நீங்கிவிட்டதாகவும் கீதிகா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை கபூர் மனைவியும், கீதிகாவின் ஆண் நண்பர் அதுல் சபர்வால் என்பரும்தான் முதலில் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் எனது மகனின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்றும் சுபாஷ் கபூரின் மனைவி கூறியுள்ளார். அதேசமயம் இந்த சம்பவம் பற்றி கபூர் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
ஜாலி எல்.எல்.பி திரைப்படம் மீரட் நகரில் வசிக்கும்,ஒரு இளம் வக்கீல், தான் மிகவும் நேசிக்கும், பிரபலமான வக்கீலைப் போல், புகழ் பெற வேண்டும் என, விரும்புகிறார். எதிர்பாராத விதமாக, ஒரு வழக்கில், தான், மிகவும் நேசித்த, அந்த பிரபலத்துக்கு எதிராகவே, வாதாட வேண்டிய நிலை ஏற்படுகிறது,
அந்த இளைஞருக்கு.இந்த சுவையான ஒன்லைனை வைத்து, காமெடியான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர்.
பிரபலமான வக்கீலாக, பொமன் இரானி நடித்துள்ளார். இந்தியாவின் பிரபல வக்கீலும், சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானியின் கேரக்டரை போன்றதாம், இவருக்கு. இதனால், இந்த படத்தில் நடித்ததை, பெருமையாக கூறுகிறார், பொமன் இரானி. இதில், இவருடன், இளம் வக்கீலாக, அர்ஷத் வர்ஷி நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் யு டியூப்பில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Tags: actor, actress, director, Harassing, cinema director, cine news.

0 comments
Post a Comment