Saturday, 22 February 2014

வைபவ் ஹீரோவாக நானே காரணம் - வெங்கட் பிரபு பெருமிதம்

எந்த ஒரு இயக்குனரிடமும் அசிஸ்ட்டெண்டாக வேலை செய்யாமல், ஒரு சில படங்களில் நடித்த அனுபவத்தைக் கொண்டே டைரக்டர் என்ற அந்தஸ்டை எட்டியவர் வெங்கட் பிரபு.

சென்னை - 28 என்ற படத்தில் முதலில் இயக்குனராக பணியாற்றி வெற்றிப்பெற்றார். அதற்கு பிறகு அவர் டைரக்ட் செய்த படங்கள் வெற்றிப்பெற்றன.

தனது படமொன்றில் முக்கியமான வேடத்தில் நடிக்க வைபவை அழைக்க, அதற்கு மறுப்பு தெரித்தாராம் வைபவ். தெலுங்கில் பெரிய இயக்குனரின் மகனான இருக்கும் தான் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.

vibav-hero-vaga-nane-karanam-venkat-prabhu



அப்படி அவர் மறுத்ததால்தான் அப்படத்திறகு ஜெய்யை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. ஆனால், அந்த படமே ஜெய்க்கு பெரிய என்ட்ரியாகி விட்டது.

அதன் பிறகுதான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்க்கு சான்ஸ் கொடுத்தார் சசிகுமார். ஆக, இப்போது வைபவ்வை விட தமிழில் பெரிய நடிகராகியிருக்கிறார் ஜெய்.

இதை சமீபத்தில் வைபவ் நடித்து வெளிவரவிருக்கும் டமால் டுமீல் படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்த வெங்கட்பிரபு. இந்த படத்தில்தான் ஒரு முழுநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் வைபவ்.

ஆனால், என் படத்தில் நடித்திருந்தால் அவர் எப்போதோ தமிழில் பெரிய நடிகராகியிருப்பார். என்னதான் வாய்ப்புகள் அமைந்தாலும் நேரம் கைகூடும்போதுதான் எதுவும் நடக்கும் என்பது இதிலிருநது தெரிகிறது என்று சொன்ன வெங்கட்பிரபு.

இப்போதும் எனது மங்காத்தா படத்தில் அவருக்கு நான் வெயிட்டான வேடம் கொடுத்ததைப் பார்த்துதான் இந்த படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக அவரை Commit பண்ணியிருக்கிறார்கள். ஆக, இப்போதும் நானே வைபவ் ஹீரோவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறேன் என்கிறார்.

0 comments

Post a Comment