Tuesday, 19 November 2013

உண்மையான "லிட்டில் மாஸ்டர்' .!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சினை, வெஸ்ட் இண்டீசிற்கு வருமாறு லாரா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்றார்.

இதுகுறித்து பிரிட்டன் வம்சாவளியை சேர்ந்த, சச்சினின் மாமியார் அன்னாபெல் மேத்தா கூறியது:

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற தினத்தில் சச்சின் ஆற்றிய உரை மகத்தானது. சில நேரங்களில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அடுத்து என்ன செய்வது என, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.


நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தேன். உடற்தகுதியை பராமரிக்க டென்னிஸ் அல்லது கோல்ப் விளையாட்டில் சச்சின் ஈடுபடுவார் என்று நினைக்கிறேன்.

லாரா அழைப்பு: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா, டிரினிடாட் வரும்படி சச்சினுக்கு அழைப்பு விடுத்தார். எனக்கும் வெஸ்ட் இண்டீஸ் பிடிக்கும். என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தேன்.

கிரிக்கெட் இல்லாமல் சச்சின் இருக்கமாட்டார். அவரது மகன் அர்ஜுனும், அதிக ஆர்வம் கொண்டவர். இனி, மகனுடன் வீட்டில் வலைப்பயிற்சியில் கிரிக்கெட் விளையாடலாம்.

நல்ல மருமகன்: மொத்தத்தில் சச்சின் நல்ல மருமகனாகவும் இருந்தார். இவருக்கு "பாரத ரத்னா' விருது கிடைத்தது மகிழ்ச்சி. சச்சினின் நேர்மை, பணிவு, அறிவாற்றல் மற்றும் குடும்பத்தின் மீது கொண்ட பாசம் என, அனைத்துக்கும் தலை வணங்குகிறேன்.

இவ்வாறு அன்னாபெல் மேத்தா கூறினார்.

சமையல் செய்வாரா
 அன்னாபெல் மேத்தா கூறுகையில்,"" வீட்டின் சில பொறுப்புகளை கவனிக்கும் படி, சச்சினிடம் அஞ்சலி தெரிவிப்பார் எனத் தெரிகிறது. துவக்க காலத்தில் சச்சினுக்கு சமையல் செய்வது பிடிக்கும்.

அஞ்சலிக்கு சமையலே பிடிக்காது. ஒருவேளை சமையல் வேலையை சச்சினுக்கு கொடுக்கலாம்,'' என, நகைச்சுவையாக கூறினார்.

உண்மையான "லிட்டில் மாஸ்டர்'

சச்சினுக்கு முன்பாக "லிட்டில் மாஸ்டர்' என்றழைக்கப்பட்டவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹனீப் முகமது, 78. கூறியது:

கிரிக்கெட்டில் சச்சின் 24 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார். கோஹ்லி, ரோகித், ஷிகர் தவான் உள்ளிட்ட இளம் வீரர்கள் உருவாக தூண்டுகோலாக இருந்தார். இவருக்கு இந்தியா நன்றி சொல்ல வேண்டும்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் டெஸ்ட் சராசரி 99 ரன்கள். சச்சின் கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்தார். இருவரையும் ஒப்பிடுவது கடினம்.

உண்மையான "லிட்டில் மாஸ்டர்' சச்சின் தான். இந்த செல்லப் பெயருக்கு இவரே தகுதியானவர்.
இவ்வாறு ஹனீப் முகமது கூறினார்.
Tags: Sachin, Tendulkar, bat, retirement, relive,  money, child, Lara, west-indies, cricket

0 comments

Post a Comment