Monday, 24 February 2014

சிம்பு இப்படி பண்ணினார்னா நான் போய்ட்டே இருப்பேன் - நயன்தாரா மிரட்டல்

‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பில் சிம்புவின் எல்லை மீறலால் செம கடுப்பில் இருக்கிறாராம் நயன்தாரா. இதனால் படப்பிடிப்பை தொடர்ந்து சுமூகமாக நடத்த முடியாமல் திண்டாடி வருகிறார் டைரக்டர் பாண்டிராஜ்.

சிம்புவின் சொந்த தயாரிப்பான ‘இது நம்ம ஆளு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பாண்டிராஜ் டைரக்‌ஷனில் தயாராகும் இந்தப் படத்தில் நயன்தாராவை சிம்புவுக்கு ஜோடியாக்க திட்டமிட்டதே டைரக்டர் பாண்டிராஜ் தான்.

சிம்புவுக்கு ஜோடி என்றவுடன் உடனே மறுத்த நயன் பிறகு கதையை கேளுங்க, பிடிச்சிருந்தா நடிங்க என்று பாண்டிராஜ் சொன்னதால் கதையைக் கேட்டு ஓ.கே சொன்னார்.

nayantara-smibu-urasal

அவர் உள்ளே வந்த நேரம் ஹன்ஷிகா உடனான காதலும் பிரேக்கப் ஆகி விட்டது. இதனால் மனம் நொந்து போயிருக்கும் சிம்பு இப்போது தனது சொந்தப் படப்பிடிப்பில்  நயன்தாராவின் எல்லை மீறி சில சமாச்சாரங்களை செய்து வருகிறாராம்.

குறிப்பாக நயனின் பெர்மிஷன் இல்லாமலேயே அவரது கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்வது நயனுக்கு பிடிக்கவே இல்லையாம். இதனால் கடுப்பான நயன் டைரக்டர் பாண்டிராஜிடம் புகார் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் உங்களுக்காகத் தான் இந்தப்படத்துல நடிக்கவே நான் ஓ.கே சொன்னேன். ஆனால் சிம்பு இப்படி பண்ணினார்னா நான் பாட்டுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து வெளியேறி போய்க்கிட்டே இருப்பேன் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

சிம்புவின் சொந்தப்படம் என்பதால் அவரிடமும் இதுபற்றி எதுவும் சொல்ல முடியாமல் இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் படம் எடுத்து முடிப்பதற்குள் நம்ம தாவு தீர்ந்திடும் போல என்று புலம்பு வருகிறார் பாண்டிராஜ்!

அதானே சிம்புவை வெச்சி நிம்மதியா படம் எடுத்துற முடியுமா என்ன?

0 comments

Post a Comment