Sunday, 23 February 2014

ஷகீலாவாக மாறப்போகும் நடிகை அஞ்சலி

கவர்ச்சி நடிகைகள் என்றாலே தனி போதை உண்டு. ரசிகர்களை கவர்ச்சி போதையில் தள்ளி மயக்க வைக்கும் திறமை அவர்களுக்கு உண்டு.

அந்த வகையில் நல்லதொரு கவர்ச்சி "பாம்" ஆக நடித்தவர் நடிகை ஷகிலா.

நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து விரைவில் படம் தயாரிக்கப்படுகிறது. நடிகை ஷகீலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைத்துள்ளார்.

nadigai anjali
அதில் சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள், படங்களில் நிகழ்த்திய சாதனைகள் தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய விவரங்கள் போன்ற அனைத்தையும் கூறியுள்ளார். இதில் உள்ள முக்கிய சம்பவங்களை வைத்து படம் தயாரிக்கப்படவுள்ளதாம்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் பெரும் வெற்றி பெற்றது. இதே போல் ஷகிலா வாழ்க்கை கதை படமும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இதைப் படமாக எடுக்கின்றனர்.

இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது. அஞ்சலியும் இதில் நடிக்க விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.

0 comments

Post a Comment