ஒருவர் மீது இருவர் சாய்ந்து - சினிமா விமர்சனம்.
ரொம்ப நாள் காணாமல் போய் பிறகு திடீரென தன்னுடைய விஷ்வரூபத்தை தொடங்கியிருக்கிறார் இயக்குனர் பாலசேகரன். இதற்கு முன்பு, இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டாரை வைத்து லவ் டுடே, ஆர்யா.. என படம் எடுத்த பாலசேகரன் தற்போதைய சினிமா ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க முயற்சித்திருக்கும் படமே ஒருவர் மீது இருவர் சாய்ந்து..
ரொம்ப நாள் காணாமல் போய் பிறகு திடீரென தன்னுடைய விஷ்வரூபத்தை தொடங்கியிருக்கிறார் இயக்குனர் பாலசேகரன். இதற்கு முன்பு, இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டாரை வைத்து லவ் டுடே, ஆர்யா.. என படம் எடுத்த பாலசேகரன் தற்போதைய சினிமா ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க முயற்சித்திருக்கும் படமே ஒருவர் மீது இருவர் சாய்ந்து..
நல்லா கவனிங்க.. ஒருவர் மீது இருவர் சாய்ந்தாம்... படத்தோடு டைட்டில்லேயே கதையை நாம தெரிஞ்சுக்க முடியும். இரண்டு பேர் கதாநாயகின்னு மட்டும் தெரியுது.. ஆனால் அது எப்படி என்பதுதான் கதை.
கதை இதுதாங்க...
ஒரு பையன்..
ஒரு பொண்ணு...
ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டா என்ன நடக்கும்..? வழக்கமான காதல்தான்.. பையனும் உருகி உருகி காதலிக்கிறான். பொண்ணும் அதுல ரொம்ப இஷ்டம்.. (காதல்ல தாங்க..)
ஒரு கட்டத்துல காதல் நிறைவேறும்போது, அந்த பொண்ணு ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடறா.... குண்டுன்னா அணுகுண்டா இருந்தால் கூட பரவாயில்லங்க.. இன்னொரு பெண் குண்டை தூக்கிப் போடறா...
அதாவது தன்னோட பிரண்டும், தானும் எதிலேயே பிரியறதில்லை.. சாப்பாடு சாப்பிடறதிலிருந்து, கை கழுவது வரை எல்லாமே ஒன்னாவே போவோம்.. ஒன்னாவே வருவோம்.. அதனால என்னை கல்யாணம் செய்துக்கிற மாதிரி என்னோட பிரண்டையும் கல்யாணம் கட்டிகோன்னு சொல்றா...
நம்மளோட தமிழ் சினிமாவிற்கு இப்போ கதை பஞ்சம் வந்துட்டுது. காரணம் எல்லா கோணத்திலேயும் படம் எடுத்து முடிச்சுட்டாங்க.. இனிமே புது புதுசா திங் பண்ணினால்தான் உண்டுன்னு நினைக்கிறதுக்கு இந்த படமும் ஒரு உதாரணம்.
லகுபரன் கதாநாயகன். சான்யதாரா, ஸ்வாதி ஹீரோயின்கள். இதுல லகுபரனும், ஸ்வாதியும் ஏற்கனவே ராட்டினம் படத்துல அறிமுகமானவங்க.. இன்னொரு புதிய ஹோரோயின் சான்யதாரா.
லகுபரன், ஸ்வாதி காதல் களம் ரொம்ப நல்லா இருக்கும். படத்தில் வானிலை அறிக்கை வாசிப்பாளராக வரும் ஸ்வாதியை என்ன மழையக்கானோம்.. வெயிலைக்காணோம்.. வழிமறிச்சு வம்பு செய்யும் லகுபரன் குறும்புதன காதல் ரசிக்க வைக்கிறது.
இடைவேளைக்குப் பிறகுதான் கதை சூடு பிடிக்கிறது. இடைவேளையில பெரிய ஸ்டவிஸ்ட் போடும் ஸ்வாதி கடைசியில் என்ன செய்றாங்க என்பதுதான் கதை.
இரண்டு பேரையும் கல்யாணம் செய்துக்க மணமேடை வரையும் போய்விட்ட சினேகிதிகள் என்ன செய்தார்கள். மணமேடையில் கல்யாணம் வரைக்கும் வந்துவிட்ட சினேகிதிகள் யார் கழுத்தில் முதலில் தாலி கட்டுவது, யாருடன் முதலில் சாந்திமுகூர்த்தம்.. என்ற போட்டியில் இதுவரை நல்ல இணைபிரியாத தோழிகளாக இருந்த அவர்களுக்கு வாதம் முற்றுகிறது.
விவாதம் ஆரம்பிக்கிறது.. கடைசியில் நடுவர்களாக வந்து அவர்களை சமாதானம் செய்து, புத்திமதி சொல்லும் நாயகர்கள் நமக்கு நன்றாக தெரிந்தவர்கள்தான்.. யார் அவங்கன்னு கேட்கிறீங்களா ? நம்ம விசுவும் பாக்யராஜூம்தான்..
சிவாவின் இசை கேட்கும்படி இருக்கிறது. பாடல்கள் காட்சிகள் எல்லாமே அருமையா இருக்கு.
சிரிப்பு போலீஸ் ராஜ்குமார் சிரிக்க வைக்கிறார். ஆக,படம் ஒருமுறை பார்க்கலாம்.. ரொம்ப பொறுமையோடு உட்கார்ந்து பார்க்கிறவங்களுக்கு இந்த படம் நல்லபடம்.. பொறுமையில்லாமல் இருக்கிறவங்களுக்கு வேஸ்ட் படம்..
ரொம்ப கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்காங்க.. உங்களுக்கு எப்படி எண்ணம்? எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடறீங்களா?
ஹா..ஹா...!!!
0 comments
Post a Comment