யுவன் பட நாயகி ராகுல் ப்ரீத் சிங், “புத்தகம்” என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
கொலிவுட் அழகி ராகுல் ப்ரீத் சிங் 'யுவன்' படத்துக்கு பின்பு, 'தடையற தாக்க' படத்தில் நாயகன் அருண் விஜய் உடன் இணைந்து நடித்தார்.
தற்போது சின்னத்திரை புகழ் விஜய் ஆதிராஜ் இயக்கும் 'புத்தகம்' படத்தில் ஆர்யாவின் உடன் பிறப்பு 'காதல் 2 கல்யாணம்' பட நாயகன் சத்யா உடன் இணைந்து நடிக்கிறார்.
இப்படம் குறித்து ராகுல் ப்ரீத் சிங், புத்தகம் திரைப்படம் ஒரு காதல் பொழுது போக்கு சித்திரம் ஆகும்.
இதில் நாயகன் சத்யா உடன் இணைந்து நடிக்கிறேன். சென்னையில் புத்தகத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுகிறது.
இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் ஆடிராஜ் இயக்குகிறார்.
ராம் பிக்சர்ஸ் தனியார் பட நிறுவனம் புத்தகம் படத்தை தயாரிக்கிறது என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
0 comments
Post a Comment