Saturday, 28 April 2012

மறந்தேன் மன்னித்தேன்

ஈரம், அரவாண் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆதியும், ஆடுகளம் நாயகி டாப்சியும் இணைந்து நடித்து வரும் படம் மறந்தேன் மன்னித்தேன்.
ஆதியும், டாப்சியும் ஜோடியாக நடிக்க சுஜா வருணி இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பிளாஷ்பேக் காட்சியில் சுஜா வருணி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக சுஜா தேர்வாகியுள்ளார்.
சுஜாவின் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவரும் வகையில் இருக்குமாம்.இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.1986ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகியுள்ளது.
இந்த வெள்ளத்தில் இரண்டு காதல் ஜோடிகள் சிக்கிக் கொண்டு அதில் இருந்து மீள்வதும் சுவாரஸ்யமான காட்சிகளாக படமாக்கப்பட்டு வருகிறது.சுஜா வரும் காட்சிகள் கோதாவரி கரையோரம் உள்ள ராஜமுந்திரி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

0 comments

Post a Comment