Saturday, 28 April 2012

யார்ட்லி விளம்பரத்தில் எமி


யார்ட்லி அழகு சோப் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸன்.

பிரிட்டனைச் சேர்ந்த எமியை, மதராசப்பட்டினம் பட நாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் விஜய்.

அடுத்து ஏக் தீவானா தா இந்திப் படத்தில் நடித்தார். இப்போது தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் எமி. இந்திய அளவில் விளம்பர வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளன.

அவரை யார்ட்லி சோப்பின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கான விளம்பரப் படங்களில் ஒய்யாரமாகத் தோன்ற ஆரம்பித்துள்ளார் அவர். யார்ட்லி பிரிட்டிஷ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment