Saturday, 28 April 2012

ரூ.1,075 கோடியில் தயாரான மென் இன் ப்ளாக் படம் தமிழில் ரிலீஸ்

உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ள 'மென் இன் ப்ளாக்' படத்தின் மூன்றாவது பாகம் 3-டியில் உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் 1997-லும், இரண்டாம் பாகம் 2002-லும் வந்தன. பத்து வருடங்களுக்கு பிறகு மூன்றாம் பாகம் வருகிறது.

முந்தைய படங்களை முறியடிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி உள்ளது. இப்படத்தில் எம்.ஐ.பி.யின் ஏஜெண்டாக வில் ஸ்மித், டாமி லீ ஜோன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டைலான விஞ்ஞான நகைச்சுவை படமாக மென் இன் ப்ளாக் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. கால கடிகாரத்தை பின்னோக்கி ஓட விட்டால் என்னவாகும் என்ற கற்பனையில் திரைக்கதை அமைத்துள்ளனர்.

2012-ல் இருந்து 1969-க்கு 43 ஆண்டுகள் பின்னே காலம் நகர்ந்து கதை பயணிப்பது போன்று திரில்லிங்காக படமாக்கியுள்ளனர். ஏலியன்கள் செய்யும் அட்டகாசங்களும் அவற்றை அழிக்கும் வீரர்களின் சாசகங்களும் இதில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

இப்படத்துக்கு நான்கு பேர் திரைக்கதை எழுதியுள்ளனர். பேரி சோனன் பெல்டு இயக்கி உள்ளார். புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

உலகம் முழுவதும் கொலம்பியா பிக்சர்ஸ் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது. தமிழகமெங்கும் தமிழில் டப்பிங் செய்து அடுத்த மாதம் ரிலீஸ் செய்கின்றனர்.

0 comments

Post a Comment