2 நாட்களின் முடிவில் 5 குறும்படங்களுக்கு தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த இளைஞர் எஸ் பிரவீண்குமார் தயாரித்த தி மெசையா படம் நடிப்புக்கான சிறந்த குறும்படமாக விருது வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த தேசப்பன் என்ற சிறுவனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த படமாக ரோட்சைட் அம்பானிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கேமிராமேன் விருது கள்ளத்தோணி படத்துக்காக பிரபல ஒளிப்பதிவாளர் செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.போட்டிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட படங்களில் 20 படங்களை மட்டும் விழாவில் திரையிட தேர்வு செய்தனர் விழாக் குழுவினர். இந்தப் படங்கள் ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் திரையிடப்பட்டன.
0 comments
Post a Comment