Saturday, 28 April 2012

தனது வாழ்க்கையை திரைப்படமாக்கும் சோனா

கொலிவுட் நாயகி சோனா, தனது வாழ்க்கையை திரைப்படமாக இயக்க உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். கொலிவுட்டில் குசேலன், பத்து பத்து, கோ, மிருகம் போன்ற படங்களில் சோனா நடித்துள்ளார். தற்போது தனது கை வசம் படங்கள் எதுவும் இல்லாததால் தனது வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க சோனா முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சோனா அளித்த பேட்டியில், என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன்.

அந்த படத்தை நானே இயக்க முடிவு செய்துள்ளேன். கடந்த சில மாதங்களாக சினிமா பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். இதையடுத்து மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளேன்.

தற்போது என்னுடைய நிறுவனம் பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டனுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்த உள்ளது. இதற்காக அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன் என்றும் பேட்டியளித்துள்ளார்.

0 comments

Post a Comment