Saturday, 28 April 2012

ரிலாக்ஸானார் விக்ரம்

உயிரைக் கொடுத்து நடிக்கும் படங்கள் உயிரை வாங்கும் அளவுக்கு மோசமாக இருந்தால் ஒரு நடிகர் என்னதான் செய்வார். தெய்வத்திருமகள் நல்ல பெயரை வாங்கித் தந்த அளவுக்கு அட்டைகாப்பி என்று அடித்து துவைக்கப்பட்டது.

ராஜபாட்டை பற்றி நினைவுகூர விக்ரமே விரும்பவில்லை. சுசீந்திரனின் துர்கனவு அப்படம்.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து பாக்ஸ் ஆஃபிஸை கைப்பற்றும் நோக்கத்தில் தாண்டவம் எனும் அதிரடிப் படத்தில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டின் பார்ன் சீ‌ரிஸின் காப்பி என்கிறார்கள் இப்போதே. விஜய் படம் என்றால் அப்படிதான் என்ற பக்குவம் தமிழ் சினிமா விமர்சகர்களுக்கு இல்லை.

இப்படியொரு இடியாப்ப சிக்கலில்தான் தனது அடுத்தப் படத்தின் ஹீரோவாக விக்ரமை டிக் செய்திருக்கிறார் ஷங்கர். சூர்யாவா, விக்ரமா என்ற ரேஸில் விக்ரம் ஜெயித்திருக்கிறார். இதையே நல்ல சகுனமாக கருதும் அவர் இப்போதுதான் ஓரளவு ‌ரிலாக்ஸாகியிருக்கிறார்.

0 comments

Post a Comment