இந்தி நடிகை வித்யாபாலன் மற்ற கதாநாயகிகள் நடிக்க தயங்கும் வேடங்களில் துணிச்சலாக நடித்து புகழ் சம்பாதிக்கிறார். ‘ தி டர்டி பிக்சர்’ படத்தில் ஆபாச கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினர். ஆனால் வித்யாபாலன் அந்த கேரக்டரில் நடித்து தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.
அதன் பிறகுதான் மற்ற நடிகைகள் அந்த கேரக்டரில் நடிக்காமல் விட்டதற்காக மனம் வெதும்பினர். தற்போது ‘கஹானி’ என்னும் இந்தி படத்தில் கர்ப்பிணி வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். படம் முழுக்க வயிறை தள்ளிக் கொண்டு கர்ப்பிணிபோல் நடந்து சிரமப்பட்டு நடித்துள்ளார்.
வித்யாபாலன் துணிச்சல் அனுஷ்காவை கவர்ந்துள்ளது. அவரது ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். கஹானி படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்தால் வித்யாபாலனின் கர்ப்பிணி வேடத்தில் தான் நடிக்க தயாராக இருப்பதாக இயக்குனர்களுக்கு அனுஷ்கா தகவல் அனுப்பி உள்ளார்.
0 comments
Post a Comment