பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
பிரபுதேவா டைரக்டு செய்யும் ர த்தோர் படபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சோனாக்சி சின்கா. பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண பிரபுதேவாவும் சோனாக்சி சின்காவும் ஜோடியாக வந்தனர்.
இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரது கண்களும் அவர்களையே மொய்த்தன. எதிர்பாராதவிதமாக மழை பெய்து போட்டியை நடக்க விடாமல் செய்தது. இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மும்பை திரையுலகில் இவர்களின் நெருக்கம் பற்றி கிசுகிசு பரவியுள்ளது.இந்த பிரபலமே சோனாக்சியை பிரபுதேவாவுடன் நெருங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments
Post a Comment