Friday, 27 April 2012

சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் விஜய் ஆதி ராஜ்


சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் விஜய் ஆதிராஜ், தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் , புத்தகம் என்ற தலைப்பில், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாகவும், புதுமுகம் மிஸ் இந்தியாவுக்கு தேர்ந்து எடுக்கப் பட்ட ராகுல் ப்ரீத் ஹீரேயினியாகவும் நடிக்கின்றனர். படத்தில் ஏகப்பட்ட சின்ன திரை பிரபலங்கள் உள்ளனர், இசை ஜேம்ஸ் வசந்தன், மேஜர் கெளதம் டான்ஸ் மாஸ்டராகவும், உமா பத்மநாபன் ஹீரோயின் அம்மாவாகவும் , சந்தான பாரதி ஒரு முக்கிய ரோலிலும் நடிக்க உள்ளனர்.13 வருசமாக மனதில் வைத்திருந்த கதையை புத்தகம் என்ற படமாக கொடுக்க உள்ளார் ஆதி ராஜ். இந்தப்படம் மூலம் காதலில் ஒரு புது விஷயத்தை சொல்ல வருகிறாராம் , இன்று பட பிடிப்பு சென்னையில் தொடங்கியது, தயாநிதி அழகிரி, மகத், பி.வாசு, கலை இயக்குனர் ஜி கே, ஆர்யா போன்ற பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

0 comments

Post a Comment