கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு பிரிவில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் திரையிடப்பட இருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ போன்ற வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமார் இயக்குநராக அவதரித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். அதர்வா, அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் கூட நடந்து வந்தது. இந்நிலையில் இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று. இந்தாண்டு வருகிற மே மாதம் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17 முதல் 23 வரை நடக்கிறது. விழாவின் துவக்க நாளில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படக்குழுவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 22-ம் தேதி முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் திரையிடப்பட இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான எல்ரெட் குமார் கூறுகையில், எங்கள் குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இதனை கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.
0 comments
Post a Comment