Friday, 27 April 2012

இந்திய நடிகைக்கு வயது 100

பிரபல இந்தி நடிகை ஜோக்ரா சேகல் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தமிழில் வெளியான உயிரே படத்தில் நடித்தவர்.உத்தர பிரதேச மாநிலத்தில் 1912ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி பிறந்த ஜோக்ரா சேகல் 1935ல் நடனத்தின் மூலம் கலைச் சேவையை தொடங்கினார். 1946ம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் நடித்து வந்த இவர் கபி குஷி கபி ஹம், சீனி கம், பென்ட் இட் லைக் பெக்காம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் பிரித்தி ஜிந்தாவின் பாட்டியாக நடித்து, தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்திய சினிமாவும் நூற்றாண்டு விழா கண்டுள்ள இதேஆண்டில் ஜோக்ரா சேகல் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

0 comments

Post a Comment