சின்னத் திரையில் கலகலப்பாக பேசியே பெரிய திரைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, 3 படங்களுக்குப் பிறகு மனம் கொத்திப் பறவையில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.
தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் கூட தனது வாய்ஸ் மூலமாக வரும் வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை. விரைவில் சித்தார்த், ஸ்ருதி, ஹன்சிகா, நவ்தீப் நடித்த ஸ்ரீதர் என்ற படம் தமிழில் வெளியாகிறது. இது தெலுங்கில் ஓ மை ஃபிரண்ட் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் பஞ்சரான படத்தின் தமிழ் டப்பிங். ஆனால் புதிய தமிழ்ப் படம் போல் வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த்துக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். வாய் இருந்தால் பிழைச்சுக்கலாம் என்பது இவர் விஷயத்தில் உண்மை.
0 comments
Post a Comment