Friday, 27 April 2012

மாவீரன் நாயகன் ராம்சரணின் திருமணம்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண். இவரும் முன்னணி நடிகராக உள்ளார். ராம்சரண் நடித்த மகதீரா தெலுங்கு படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

ராம்சரணுக்கும் ஆந்திரா வைச்சேர்ந்த தொழில் அதிபர் மகள் உபாசனா காமினேனிக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயம் நடந்தது. தற்போது திருமண தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி ஐதராபாத் கான்டி பேட்டாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறும் என இரு வீட்டாரும் அறிவித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திருப்பதியில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். மறுநாள் ஜூன் 15-ல் வரவேற்பு நடைபெறும் என தெரிகிறது. வரவேற்புக்கு ரசிகர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளனர். கைவசம் உள்ள படங்களை திருமணத்துக்கு முன்பு முடித்து கொடுத்து விடுவதற்காக இரவும் பகலும் விறு விறுப்பாக் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

0 comments

Post a Comment