Tuesday, 10 April 2012

விவேக்கின் ஜொள்ளு காமெடியும், கலக்கலான சீன்களும்...

வணக்கம் இது குள்ளு கோகுல். எனக்கு இன்னொரு பேரும் உண்டுங்க.. அது இதற்கு முன்பு இந்த தளத்திற்கு வந்தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் புதுசா வந்திருக்கிற உங்களுக்குத் தெரிய வேணாமா?

சொல்லட்டுமா?
ஒன்.

டூ,

த்ரீ...

தி கிரேட் ஜொள்ளு கோகுல்.. எல்லோரும் ஒரு முறை ஜோரா கை தட்டுங்கப் பார்க்கலாம். ஹா.. ஹா..

என்னோட அறிமுகப் பதிவு இது. படிக்காதவங்களை இதையும் ஒரு தடவைப் படிச்சுப் பார்த்துடுங்க.
வணக்கம்.. இது 'குள்ளு' கோகுல்..!! நானும் நமீதாவும்...!!

இப்போ வர்றேன் மேட்டருக்கு..

மரங்கொத்திப் பறவை கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்னங்க.. மனம்கொத்திப் பறவை.. அதாங்க இது ஒரு சினிமாவோட டைட்டிலு...

manam koththi paravai padangal
இவங்கதான் மனம்கொத்திப் பறவை படத்தோட ஹீரோ - ஹீரோயி
எப்படி எப்படியோ டைட்டில் வைக்கிறபோது மனம்கொத்திப் பறவைங்கிறது நல்லவே இருக்கு. இன்னும் சொல்லப்போனா இனிமையா இருக்கு.

(இருக்காதா பின்னே கதாநாயகியைப் பார்த்தாவே உனக்கு இனிமை வந்திடுமேன்னு கேட்கிறது எனக்கு காதுல விழாம இல்ல.. )

இது எவ்வளவோ பரவால்லங்க...

படத்துக்கு பேர் வைங்கடான்னு இவங்க BF, 123, 12B ன்னு நெம்பரா வச்சிக்கிடறாங்க.. இப்போ 'மூணு'

இது ஒரு டைட்டிலாம். ஒரு நெம்பரையே படத்தோட பேருன்னு சொல்லி அதையும் பேமஸ் ஆக்கிட்டாங்க.

ஜொள்ளு கோகுல்னு பேரை வச்சிகிட்டு டைட்டிலப்பத்தி எழுத உனக்கென்ன ரைட்ஸ் இருக்குன்னு கேட்கிறீங்களா? அதுவும் வாஸ்தவம்தான்.

இந்த மனம் கொத்திப் பறவை படத்தைப் பற்றி ஒரு கொசுறு செய்தியைத் தந்திடறேன். இந்த படத்தின் கதாநாயகன் நம்ம சின்னத்திரையில் நடித்தவர். அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்தான். பேரு சிவகார்த்திகேயன்.

இந்த போட்டோவைப் பாருங்க உங்களுக்குக்கேத் தெரியும்.

manam koththi paravai padangal

இந்த படத்தோட டைரக்டர் எழில்.

அப்புறம் இந்த காமெடியைப் பாருங்களேன்..இதுல விவேக் பண்ணுற அட்டூழியத்தை..!!! வித்தியாசமான கெட்டப்பில், தன்னுடைய காமெடி குழுவோட இவர் பண்ணியிருக்கிற அட்டகாசத்தைப் பார்த்து சிரிக்கலாம்.. சில வேளைல கொஞ்சம் அதிகமா இருக்கிறமாதிரி தோணும். இதுல வர்ற பின்னணி இசை காமெடிக்கேத்த மாதிரி செட்டாகியிருக்கு. உண்மையிலேயே பார்த்து ரசிக்கலாம். என்ன அந்தக் கால தெரிக்கூத்தில ப்பூன் (Baffon) செய்றமாதிரியான ஒரு காமெடி. ஆனாலும்....காட்சியில வர்ற கதாநாயகியை ரசிக்கலாம்.. என்ன அழகு.. என்ன அழகு..!!! சூப்பர் போங்க...!!!!




விவேக் பண்ணுற காமெடிக்கும் மேல இந்த பதிவுல எழுத ஒன்னும் இல்லை..

நாளைக்கு மறுபடியும் ஒரு வித்தியாசமான பதிவோட சந்திக்கிறேன்...

எப்பவும் போல உங்கள் குள்ளு கோகுல்  'ஜொல்லு' கோகுல்...!!! வரட்டுங்களா???!!!

0 comments

Post a Comment