Wednesday, 11 April 2012

"பழைய குருடி கதவ தெறடி" நயன்தாரா - சிலம்பரசன் பேட்டி

மறுபடியும் உங்கள் அபிமான குள்ளு கோகுல்தாங்க..

கோலிவுட் உலகத்தில பெரும்பிரச்னையாக பேசப்படுவது இந்த மாதிரியான விஷயங்கள்தான். எந்த மாதிரியான விஷயங்கள்னு கேட்கறீங்களா? அதாங்க அவர் கூட இவருக்கு தொடர்பு, இவர் கூட அவருக்குத் தொடர்புன்னு' அடிக்கடி பேசிக்குவாங்க.

இன்னும் சொல்லப்போனால் கொஞ்சநாளா இருந்து வந்த நயன்தாரா - பிரபு தேவா பிரச்னைதான் ஹைலைட். அரசல் புரசலா பேசினதை நிஜமாக்கி, நாடுமுழுசும் நாறடிச்சுட்டாங்க.. இருந்தாலும் சினிமாக்காரங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா!  விடு ஜூட்.. அவங்கவங்க மறுபடியும் தங்களோட தொழில்களைத் தொடங்கப் போயிட்டாங்க..




இப்போ நம்ம சூப்பர் ஸ்டார் சிம்பு என்ன சொல்றாருன்னா...ச்சீ..ச்சீ...லிட்டில் ஸ்டார் சிம்பு என்ன சொல்றாருன்னா.. "இந்த பழம் இனிக்கும்"ன்னு சொல்றாரு. ஆனால் மூனு வருஷத்துக்கு முன்னாடி "இந்தப் பழம் புளிக்கும்" சொன்னீங்களேன்னு கேட்டா.. "அப்போ காயா இருந்தது.  இப்போ பழுத்துடுச்சு. கிளி கூட கொத்திப்பார்த்துடுச்சு.. ஸோ .. இப்ப பழம் இனிக்கும்.. " அப்படின்னு டயலாக் எல்லாம் விடறாராம்..

"நயன்தாராகூட நடிக்கிறதுக்கு எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லப்பா..."

அப்படின்னு சொல்லிட்டாரு. நம்ம சின்னம்மாவும்... அட நீங்க வேற... நான் தமிழ்நாட்டு சின்னம்மாவைச் சொல்லப்பா.. நயன்தாரவைச் சொல்றேன்...

"அவங்களும் இப்போ எனக்கு சிம்பு மட்டுமல்ல யார்கூட நடிக்க டைரக்டர் சொன்னாலும் நடிப்பேன்.. அதுதானே என் தொழில்லு... " ன்னு சொல்லிட்டாங்க...

இப்போ அதுக்கென்னங் குள்ளு? அப்படீங்கிறீங்களா? இருக்குங்க.. விஷயம் இல்லாமலா சொல்வேன்.. "பழைய குருடி கதவ தெறடி" ன்னு கிராமத்தில ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதுக்கணக்கா ஆகிடுச்சோன்னு ஒரு டவுட்.. அதான்..

ஆனா மறுபடியும் இப்படி இவங்க சேர்ந்து நடிச்சாக்க இந்த மாதிரி சீனுங்களுக்கு குறைச்சல் இருக்காதுன்னு நெனக்கிறேன்...

"மகா ஜனங்களே இந்தப் படங்கள் எல்லாமே சினிமாவுக்காக எடுக்கப்பட்டது. உண்மையில்லை.. நம்புங்கப்பா...!!!" (இதை கவுண்டமணி ஸ்டைல்ல படிங்கப்பா..)

nayathara_simbu

ஆனாலும் இந்த குள்ளு கோகுலுக்கு கொழுப்பு அடங்காதுப்பா.. யாரோ எப்படியோ போறாங்கன்னு விடவேண்டியதுதானே.. !! அப்படீங்றீங்களா? அதெப்படிங்க விட முடியும். நானும் நயன்தாராவும் ரொம்ப வருஷமா பழகிறோமில்ல...!!!

மனசாட்சி...: 'அடங்கொய்யால.. இது எப்ப இருந்துடா... குள்ளு'

குள்ளுகோகுல்: அதுவா ரஜினி சார் படத்துல 'கொக்கு பற பற' கோழி பற..பற... அக்கா ரெக்கை விரிச்சபோதிருந்தே எனக்குப் பிடிக்கும். அப்ப நான் அஞ்சாங்கிளாஸ் படிச்சேனாக்கும். ஹா..ஹா....

nayan_simbu
nayan_simbu
மனசாட்சி: ஏண்டா குள்ளு இப்படி அழிச்சாட்டியம் செய்யற...

குள்ளு கோகுல்: நாடு நல்லவிதமா வெளங்கனும்னா இப்படி நாலு வரி எழுதினாதான் மாப்ள வெளங்கும். உனக்குப் புரியாது. நீ சுருங்கு.

என்னங்க.. இந்த பதிவில கொஞ்சம் தூக்கலா எழுதிட்டேன்னு நினைக்கிறீங்களா? என்ன நினைக்கிறீங்க? ஏதாவது எழுதி சொல்லுங்க..எனக்கும் உங்களோட பிரண்ட்ஷிப் கிடைக்கும் இல்லையா? என்னா நான் சொல்றது?

0 comments

Post a Comment