Saturday, 5 February 2011

வாடா போடா

வாடா போடா   முகம் தெரியாமல் பழகும் இரு நண்பர்கள் கதை.

பணக்கார இளைஞன் ஷரண். இருவரும்இணைய தளம் மூலம் நண்பர்களாகின்றனர். கம்ப்யூட்டர் என்ஜினியர் நந்தா. சென்னையில்வேலை தேடுகிறார். பிறகு செல்போனில் நட்பைவளர்க்கிறார்கள். இருவரும் நேரில் சந்திக்ககூடாது சூழ்நிலைகள் சேர்க்கட்டும் என்றகண்டிஷனோடு தினமும் பேசிக் கொள்கின்றனர் .

நந்தா அனுப்பும் சில படங்கள் மூலம் ஷரனின் காணாமல் போன தாய் கிடைக்கிறார். இதனால் நட்பு தீவிரமாகிறது. ஷரன் அனுப்பும் பணத்தில் நந்தா தங்கை திருமணம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் இரு வருக்கும் யார் என்று தெரியாமலேயே மோதல் உருவாகிறது.

அடிக்கடி சண்டையிட்டு அடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடையாளம் கண்டு சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ். நந்தா ஆவேச இளைஞனாக பளிச்சிடுகிறார். அடிதடியில் வேகம்.. முன் கோபத்தில் செய்யும் முரட்டுத்தன காரியங்களால் அடுத்து என்னாகுமோ என்ற படபடப்பை உருவாக்குகிறார்.

ஷரன் கேரக்டரில் ஒன்றுகிறார். பாசம், நட்புக்கு ஏங்குவது... நண்பனால் தாயை காணும் சந்தோஷத்தில் உருகுவது என அழுத்தம் பதிக்கிறார். புல்லாங்குழல் இசையில் ஈர்ப்பாகி நந்தாவை காதலிக்கும் யாஷிகா நிறைவு. பிரவுசிங் சென்டர் நடத்தும் ஸ்ரீநாத் சிரிக்க வைக்கிறார்.

பார்க்காத நட்பை விறுவிறுப்பான திரைக்கதையில் நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் மணிகை. கிளைமாக்சை மாற்றி யோசித்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். சித்தார்த் இசையும், அருண்ஜேம்ஸ் ஒளிப்பதிவும் பக்கபலம்

0 comments

Post a Comment