Saturday, 12 February 2011

யுத்தம் செய்

யுத்தம் செய்
 
மர்ம கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரி கதை. மிஷ்கினும் சேரனும் கைகோர்த்துள்ளதால்கிக்காகவேவந்துள்ளது. கல்லூரி மாணவிகள், அடியாட்கள், ஆட்டோக்காரர் என பல தரப்பினர் காணாமல்போகின்றனர்.



ஆட்கள் கூடும் இடங்களில் அட்டைப்பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட கைகள்கண்டுபிடிக்கப்படுகின்றன. நகரமே அல்லோலப்படுகிறது. கொலையாளிகளைபிடிக்க சி.பி.சி..டி. போலீஸ் அதிகாரி சேரன் தலைமையில் குழுபுறப்படுகிறது. அவர்கள் துப்பு துலக்கையில் திகில் முடிச்சுகள் அவிழ்வதும்கொலையாளிகள் யார் என்று அறியப்படுவதும் உலுக்கும் கதையோட்டம்...


சி.பி.சி..டி. போலீஸ் கெட்டப்பில் சேரன் கன கச்சிதம். தங்கை மாயமானசோகத்தை முகத்தில் இறுக்கமாக்கி கடத்தல் கும்பலை தேடி அலைவதில்வீரியம் காட்டுகிறார். அரிவாள்களுடன் பாயும் ரவுடிகளை சின்ன கத்தியுடன்மோதி வீழ்த்தும் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது.

காதல் மென்மையில் இருந்து விலகி ஆக்ஷன் ஹீரோவாக தன்னைநிரூபித்துள்ளார். தங்கையை மீட்க கொலைகாரனை விடச்சொல்லிமேலதிகாரியிடம் கெஞ்சி அழுவதில் போலீஸ் மிடுக்கு அடிபடுகிறது.
வில்லன் கோஷ்டிக்கு ஏவல் செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் செல்வாமிரட்டுகிறார்.

ஒய்.ஜி. மகேந்திரனும் அவர் மனைவி, மகனும் திருப்பமான கேரக்டர்கள். மகள்சாவுக்கு காரணமானவர்களை பழி தீர்க்க அவர்கள் செய்யும் சைக்கோ பழிவாங்கல்கள் திகில்படுத்துகின்றன. கிளைமாக்சில் குண்டுகளை நெஞ்சில்தாங்கி விறைப்பாக எதிரிகளை தாக்க நடந்து வருதல் உதறல்...

பிணக்கிடங்கு டாக்டர் ஜெயப்பிரகாஷ், ஜவுளிக்கடையில் உடை மாற்றும்பெண்களை ரசிக்கும் சபலக்கார வில்லன் மாணிக்க விநாயகம், போலீஸ்டி.எஸ்.பி. நரேன், யுகேந்திரன், பெண் போலீஸ் தீபாஷா கேரக்டர்களும்வலுவாக செதுக்கப்பட்டுள்ளன.

கடத்தல், கொலைகள், துப்புறிதல் கதையை இதுவரை பார்க்காதவித்தியாசமான கோணத்தில் விறுவிறுவென நகர்த்தி காட்சிகளோடு ஒன்றவைக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

ஆரம்பக்கட்ட விசாரணைகள் பிடிபடாமல் நகர்வது சலிப்பு. கே-வின் பின்னணிஇசை பெரிய பலம். “கன்னித்தீவு பொண்ணாபாடல் தாளம் போட வைக்கிறது. சத்யாவின் கேமிரா இரவு பயங்கரங்களை கண்களில் பதிக்கிறது.

0 comments

Post a Comment