Wednesday, 2 February 2011

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் ஸ்ருதி!

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் ஸ்ருதி

அறிமுகமான படத்தின் பெயர் லக் என்றாலும், நடிப்புவிஷயத்தில் அது சுத்தமாக இல்லை ஸ்ருதிக்கு.

தொடர்ந்து தோல்விப் படங்கள்தான் அவருக்குவாய்க்கின்றன. சமீபத்தில் அவர் நடித்து வெளியானதெலுங்குப் படமும் தோல்வியைக் கவ்வியுள்ளது.
மதுர் பண்டார்கரின் இந்திப் படமான 'தில் தோ பச்னா ஹை ஜி'யில் கவுரவ வேடத்தில் நடித்தார். அந்தப் படமும் அவுட்!

இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவரை மீண்டும் நாயகியாக ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். இப்போது முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம் ஸ்ருதி.

இப்படத்துக்கு பி சினஸ் மேன் என பெயரிட்டுள்ளனர். பூரி ஜெகன்னாத் இயக்குகிறார். வழக்கமாக தன்னைத் தேடி வரும் இயக்குநர்களிடம் கதை கேட்கிறேன் பேர்வழி என்று அலைக்கழிப்பவர் என்ற பெயர் ஸ்ருதிக்கு ஏற்பட்டுவிட்டது. அதை இந்த படத்தில் பொய்யாக்கிவிட்டாராம். கால்ஷீட் கேட்டு இயக்குநர் பூரி ஜெகன்னாத் அணுகியதும், 'கதையைக் கூட அப்புறம் கேட்டுக் கொள்கிறேன், பிடியுங்கள் தேதிகளை' என்றாராம்!

0 comments

Post a Comment