Tuesday 20 May 2014

அடர்ந்த காட்டில் இளம் ஜோடி அட்டகாசம்; போலிசார் பிடித்து விசாரணை

அடந்த காட்டுக்குள் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. அது பல ஆண்டுகாலமாக கவனிக்கப்படாமல் இருந்ததால், சிதலமடைந்து, கேட்பாரற்று கிடந்தது. ஆனால் நிறைந்த அமாவாசை அன்று அங்கு சென்று வழிபட்டால் நினைத்தெல்லாம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இரு வேறு ஜாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி நேற்றிரவு அந்த காட்டிற்குள்சென்றது. வழிப்பட்டுத் திரும்பும் வேளையில் புயல்காற்றுடன் மழையும் கொட்ட ஆரம்பித்ததால், அந்த ஜோடி திக்கு தெரியாமல், என்ன செய்வதென்று விழித்துக்கொண்டிருந்தது.

நேரமாக...நேரமாக இருட்ட ஆரம்பித்ததால், அந்த சிதிலமடைந்த மண்பத்திலேயே தங்கி, விடியற்காலை வீட்டிற்கு செல்லலாம் என முடிவெடுத்துத் தங்கினர்.

திடீரென இடித்த இடியின் காரணமாக அந்த யுவதி, அவனை கட்டி அனைத்துக்கொண்டாள். இளஞ்ஜோடி சூடேறியது.

பரஸ்பர அணைப்புகளில் இதம் காணத்தொடங்கிய அந்த ஜோடி விடிய விடிய கணவன் மனைவியாக மாறியிருந்தனர்.

வீட்டில் இருவரையும் காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர்களின், அவர்களின் நண்பர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் , அந்த அடர்ந்த காட்டில் தேட புறப்பட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த அந்த ஜோடி, அந்த இருட்டிலும் அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்தை நோக்கி பயணித்தனர். மின்னலின் வெளிச்சத்தில் பாதை தேடி அவர்கள் பயணித்தனர்.

சிறிது நேரத்தில் பெற்றோர்கள் அங்கே வந்து பார்த்த போது அந்த ஜோடி இருந்ததற்கான தடயங்களை கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் இல்லை.

இந்நிலையில் அவர்களைத் தேடி இந்த நேரத்திற்கு இங்கு வந்திருக்க கூடாது என்றும், காலையில் வந்திருக்கலாம் என்றும், அங்கு வந்திருந்த உறவினர்கள் கூறினர்.

போதிய வசதியின்றி, இருட்டில் அடந்த காட்டிற்குள் அவர்கள் நடந்துசெல்லும்போது, அவர்களது உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம் என்பதால் உடனே வீட்டற்கு திரும்புவதுதான் நல்லது என்று அவர்கள் வீட்டிற்கு திரும்பினர்.

இதை புதர் மறைவில் மறைந்திருந்த ஜோடி கவனித்துவிட்டு, பெருமூச்சு விட்டது. விடிந்த வேளையில் அவர்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று, நடந்த விபரத்தை கூறி, அவர்களுக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டினர்.

முழுமையான தகவல்களைப் பெற்ற பிறகு அந்த காவல் நிலைய அதிகாரி, அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து சமாதானம் பேசி, அந்த புதிய ஜோடிக்கு, திருமணம் செய்து வைத்தனர்.

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, இருவேறு ஜாதிகளாக இருப்பினும், இருக்கும் வரையில் நல்ல முறையில் பிழைத்துவிட்டு போகட்டுமே என்று பெற்றோர்களும் சம்மதித்து, அவர்களை ஆசிர்வதித்து, புதிய வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்தனர்.

உண்மையான பெற்றோர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஜாதி, மதம், இனம் என வேறுபடுத்திப் பார்த்து, அவர்கள் வேதனைப்படுவதோடு மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் வேதனைக்குள்ளாக்கி, அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது எந்த வித்தஃதிலும் நியாயம் இல்லை.

0 comments

Post a Comment