Wednesday 7 May 2014

வடிவேலுவின் புதிய படம் விரைவில் ஆரம்பம்

வடிவேலுவின் தெனாலிராமன் படத்தினைத் தொடர்ந்து,  புதிய படமும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாள் கழித்து வடிவேலு நாயகனாக நடித்து வெளியான படம் 'தெனாலிராமன்'. யுவராஜ் தயாளன் இயக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.

இப்படம் வெளியாகி, வெவ்வேறுவிதமான விமர்சனங்களைப் பெற்றது.

vadivelu-vin-puthiya-padam-viraivil-thodakkam

தற்போது மீண்டும் வடிவேலு - யுவராஜ் இணைந்து படம் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து இயக்குநர் தயாளன் கூறியதாவது,

18 ம் நூற்றாண்டில் பயணமாகும் இந்தப்படம் வரலாற்று படமல்ல.

இதுவரைக்கும் யாரும் எதிர்பாராத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதில் முழுக்க கற்பனையை தெளித்து திரைக்கதையை எழுதி வருகிறேன்.

இப்படத்தின் வேலைகளை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

0 comments

Post a Comment