Sunday 18 May 2014

தோலிலிருந்து விந்தணுக்களை உற்பத்தி செய்யும் புரட்சிகர தொழில்நுட்பம்

இனி மலட்டுத் தன்மை என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் குழந்தைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

மலட்டுத் தன்மையுடைய ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும், தங்களது விந்தணு, கருமுட்டைகளின் மூலமாகவே குழந்தைகளை உண்டாக்கி, பெற்று மகிழ்கின்றனர்.

கருப்பை இல்லாத பெண்கள் கூட குழந்தைகளை டெஸ்ட்டியூப், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வகையில் புத்தம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

அதுதான் ஆண்களின் தோலிலிருந்து விந்தணுக்களை உருவாக்கும் புதிய தொழில்நுட்ப முறை ஆகும்.

பரம்பரை ரீதியான மலட்டுத்தன்மைக்கு உட்பட்ட ஆண்களின் தோல்களிலிருந்து விந்தணுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் அவர்களின் இனத்தை விருத்தியை செய்ய முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஸ்டோன் போர்ட் பல்கலைக்கழகத்தின் மூலவுயிர் கல உயிரியல் மீள் விருத்தி மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி ரெயிஜோ பெரா தலைமையிலான குழு இந்த அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது.

தோல் கலங்களிலிருந்து நேரடியாக விந்தணுக்களை விருத்தி செய்வதற்கான இந்த ஆரம்பக் கட்ட செயன்முறையானது விந்தணுக்களின் விருத்தி தொடர்பில் ஆய்வை மேற்கொள்ளவும் இனவிருத்தி ஆற்றலற்றவர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளவும் வழி வகை செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பரம்பரை பிரச்சினைகள் காரணமாக 10 சதவீதம் முதல் 15 சதவீதமான  தம்பதிகள்  குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டு தன்மைக்கு உட்பட்டுள்ளதாகவும், இதனால் ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்படி ஆய்வானது மரபணுவில் வை நிறமூர்த்தங்கள் இன்மை காரணமாக குறைந்த விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியற்ற நிலையிலுள்ள 3 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் குழந்தையை உருவாக்க முடியா திறனுள்ள ஆண்களும் இனி தங்களின் வாரிசுகளைப் பெற்றெடுக்க முடியும்.

0 comments

Post a Comment