Sunday 18 May 2014

பெற்ற குழந்தையை விற்ற தாய்; கணவன் பிரிதலில் ஏற்பட்ட சோகம்

ஆட்டை விற்கலாம்.. மாட்டை விற்கலாம்... ஏன் நகை நட்டு, நிலம் நீட்சு.... இப்படி அசையும் அசையா சொத்துக்களைக்கூட விற்று, மனிதன் பொருளாதார தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

ஆனால் பெற்றக் குழந்தையை விற்கலாமா?

இங்கே ஒரு பெண் கணவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், அவனால் உருவாக்கப்பட்ட குழந்தையை பெற்றெடுத்து, வெறும் 50000 ரூபாய்க்கு விற்றுள்ளாள்.

அதற்கு மூன்று பெண்கள் உடந்தை.

ஒரு தாயின் மனப்பான்மை அவளுக்கு எங்கே போயிற்று. கணவனிடமிருந்து பிரிந்து வந்த கசப்புத் தன்மையை அவளை அவ்வாறு மாற்றியிருக்கிறதா?

சாதாரண ஆடு மாடுகளெல்லாம் கூட பெற்ற குட்டிகளை, மற்ற உயிரினங்களிடமிருந்து காக்க போராடுகின்றன. பாசத்தை மடிப்பால் மூலம் ஊட்டி வளர்க்கின்றன.

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை விற்று தின்ன பார்த்திருக்கும் இப்பெண்ணை என்னவென்று சொல்வது?

50000 ரூபாயும் இரத்தமும், சதையும் பிண்டமுமாக வளர்த்தெடுக்கப்பட்ட குழந்தையும் ஒன்றா?

நாளை 50000 ரூபாய் கட்டு நோட்டுகள் "அம்மா" என்று அவளை அழைத்திடுமா?

மழலைச்சொல்லை கேளாத, மழலைகளை பேணாத பெண்ணாகத்தான் அவள் இருக்க வேண்டும்.

பிறர் நிர்பந்தப்படுத்தினால் கூட , ஒரு தாயாக, தாயின் மனப்பான்மையோடு, அந்த குழந்தையை அவள் வளர்த்திருக்க வேண்டாமா?

அவளால் முடியவில்லை என்றால், அதற்குரிய ஏதேனும் ஒரு வழிமுறைகளைப் பின்பற்றி, ஏதாவதொரு ட்ரஸ்ட் மூலமாகவோ, வசதி படைத்தவர்கள் மூலமாக தன் குழந்தையின் எதிர்காலத்தை முன்னிறுத்தி, அவனை வளர்ப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

பெற்ற குழந்தையைவிட, காசு பணமே பெரியதாக எண்ணிய அப்பெண்ணின் கயமையை என்னவென்று சொல்வது?

இதுபோன்று உள்ளவர்களால்தான் பென்னிணத்திற்கே பங்கம் வந்து சேர்கிறது.

ச்சே..என்ன ஒரு கலிகாலம் இது... இன்னும் எத்தனை குழந்தைகள் இதுபோல் ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி போல விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறதோ? அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


0 comments

Post a Comment