Wednesday 7 May 2014

கன்னட சூப்பர் ஸ்டாருடன் கட்டழகி வரலட்சுமி..!

கன்னட சூப்பர் ஸ்டாருடன் கட்டழகி வரலட்சுமி ஜோடி சேர்ந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மதகதராஜா படத்தில் இணைந்து நடித்தார். அந்த படம் வெளிவராததால், தொடர்ந்து வரலட்சுமி கன்னட சினிமா உலகில் திறமை காட்ட உள்ளார்.

"மாங்கிய" என்ற கன்னட படத்தில், கன்னட சூப்பர் ஸ்டாரான "சுதீப்" உடன் நடிக்கவுள்ளார்.
kannada-super-stare-udan-varalakshmi



இப்படத்தில் நடிக்கும் பிரபலமானவர்கள் ரன்யா, ரம்யா கிருஷ்ணன், வி. ரவிச்சந்திரன் ஆகியோர்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான மிர்ச்சி என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் மாங்கியா திரைப்படம். இந்த படத்தில் அனுஷ்கா, ரிச்சா, சத்யராஜ், நதியா ஆகிய முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த மிர்ச்சி, கன்னடத்தில் "மாங்கியா"வாக சூப்பர் ஹிட் கொடுக்கும் என நம்புகிறது மாங்கியா படக்குழு.

0 comments

Post a Comment