Wednesday 7 May 2014

ட்விட்டரில் வலைத்தளத்தில் ரஜினியே பரப்பிய கோச்சடையான் ஸ்பாம்

ரஜினி படத்தைப்போட்டு மற்றவர்கள் விளம்பரம் செய்வது ஓகே. ஆனால் ரஜினியே தன் படத்தைப்போட்டு விளம்பரம் செய்வது இம்சை.

ரஜினி ட்விட்டருக்கு வந்துவிட்டார் என்றதும் பல்லாயிரக்கணக்கோர் அதில் இணையத் தொடங்கிவிட்டனர். செய்தியைப் படித்தவுடன் நானும் ஃபாலோ பட்டனை அழுத்திவிட்டேன்.

அழுத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சில ஆயிரம்பேர் அவரை தொடர ஆரம்பித்திருந்தார்கள். அந்த அளவுக்கு வேகம்.
twitteril-rajini-parapiya-kochadaiyan-vilambaram
அந்த வேகத்துக்கும் முனைப்புக்கும் காரணம் ரஜினியுடன் பேசலாம் அல்லது ஏசலாம் என்ற ஆர்வம்தான்.

ஆனால் ஒரு தானியங்கி சாஃப்ட்வேர் (bot) இயந்திரத்தனமாக "Thank you for being a part of the fan family. Here is an exclusive Kochadaiiyaan poster for you, with a link attached to it." என்று கோச்சடையான் விளம்பரம் செய்துகொண்டிருந்தது. அதுதான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கு நேரடியாகத்தான் வரவேண்டும்.

ஏனென்றால் இது சமூகவலைத்தளம். இங்கு மனிதர்களைத்தான் எதிர்பார்க்கிறோம்... ரோபோக்களை அல்ல.

0 comments

Post a Comment