Friday 18 April 2014

டைட்டானிக் பட சாதனையை முறியடித்த தென்னிந்திய திரைப்படம்..!

மலையாள நடிகர் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் திரைப்படம் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதி வாக்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக த்ரிஷ்யம் அமைந்துள்ளது. த்ரில்லர் வகைப் படமான இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார்.

உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிப்படமானதோடு மட்டுமல்லாமல், 51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது.

titanic-thiraipadathai-muriyaditha-thenninthiya-thirai-padam


அப்படத்தின் சாதனையை தென்னிந்திய  படமான த்ரிஷ்யம் முறியடித்து உள்ளது.

அதுமாதிரி ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகி 100 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் மலையாள படமும் ’த்ரிஷ்யம்’ தான்!

கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதி எல்டோரடோவில் வெளியான ’த்ரிஷ்யம்’ 100-வது நாளை கடந்து இன்னமும் அங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

இதன் தமிழ் ரீமேக்கில் நமது உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment