Friday 18 April 2014

IPL;மெக்ஸ்வெல்லின் ருத்ரதாண்டவத்தால் சென்னை அணியை 6விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்

ஏழாவது IPLபோட்டிகளின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் இன்றைய ஆட்டத்தில் மோதின.

 டாஸ் வென்ற  சென்னைஅணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களான மெக்கல்லமும், ஸ்மித்தும், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4,3 ஓவரில் 50 ரன்களை கடந்த சென்னை அணி, 100 ரன்களை 9,3 ஓவரில் கடந்தது.

 முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்து மெக்கல்லம், ஸ்மித் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது, 12.4 வது ஒவரில்  அதிரடியாக ஆடிவந்த மெக்கல்லம் படேல் பந்தில் மெக்ஸ் வெல்லிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

punjab-win-against-chennai-in-ipl-2014-cricket



அவர் அப்போது 45 பந்துகளை சந்தித்து 5 சிக்சர், 4பவுண்டரி உட்பட 67 ரன்களை குவித்திருந்தார் இதனை தொடர்ந்து  வந்த ரெய்னா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்மித் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். இதனால் ரன் ரேட் குறையவில்லை. 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை தொட்ட சென்னை அணி, தொடர்ந்து அதிரடியாக ஆடியது.

இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித் 66 ரன்களில்( 43 பந்துகளில் 6பவுண்டரி. 3 சிக்சர் உட்பட) வெளியேறினார். பாலாஜி பந்தில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து ஆடிவந்த தோனி, அதிரடியாக ஆடினார்.  18.4 ஓவரில்  185 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரெய்னா (24 ரன்களில்) ஆட்டம் இழந்தார்.

இதனை தொடர்ந்து வந்த ப்ராவோவுடன் இணந்த டோனி, வாணவேடிக்கை நடத்தினர். கடைசி ஒவரில் 18 ரன்களை குவித்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி  18.5 ஓவரில் 4விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்த மூலம் 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மெக்ஸ்வெல் 43 பந்தில் 95 ரன்கள் குவித்தது பஞ்சாபின் வெற்றிக்கு காரணம்.38 ரன்ளுக்குள் புஜாரா ஷேவாக் உள்ளிட்ட 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணியை, மெகஸ்வெல் அதிரடியாக ஆடி வெற்றி பெற வைத்தார். அவருக்கு உறுதுணையா மில்லர் 54 ரன்கள் குவித்தது  குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment