Monday, 7 April 2014

ஈரமான மைதானம் தான் தோல்விக்கு காரணம்

நேற்று நடைப்பெற்ற உலக கோப்பை T-20 போட்டியில், மிக எளிதாக இந்திய அணியை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை.

போட்டிக்கு முன்பு பெய்த மழையால் மைதானம் எங்கும் ஈரப்பதம் காணப்பட்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டம் மலிங்கா பௌலிங் தேர்வு செய்தார்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்த்து. பொறுமையான ஆட்டத்தைக் கையாளும் ரஹானே சொற்ப ரண்ணில் ஆட்டமிழக்க, கோஹ்லி களம் இறங்கினார்.

ரோஹித்துடன் இணைந்த ஹோக்லி தனது வழக்கமான, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறிது நேரம் தாக்குபிடித்த ரோஹித் தன் பங்கிற்கு சொல்லும்படியான ரன்னை எடுத்துவிட்டு, வெளியேறினார்.

அடுத்த வந்த பேட்மேன் யுவராஜ் மிக மெதுவான ஆட்டத்தை ஆடினார்.

யுவராஜின் ஆட்டத்தைப் இதுபோன்று யாருமே பார்த்திருக்க முடியாத அளவு மிக மோசமானதாக அமைந்தது.

இறுதியில் நன்றாக விளையாடி விராத் ஹோக்லி 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மைதானத்தின் ஈரப்பதம்தான் காரணம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மைதானத்தின் ஈரப்பதம் மிகுதியால் பந்து சரியான அளவில் மேலேழும்பவில்லை என்றும், மட்டையில் பந்து பட்டு, அதிக தூரம் செல்லவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஈரம் காய்ந்த பிறகு விளையாட இலங்கை மிக எளிதாக வெற்றி இலக்கை எட்டியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்று அவர்கள் மேலும் கூறினர்.

இலங்கை அணியினர் கோப்பையை வென்று, இலங்கை அணியிலிருந்து இருபது ஓவர் போட்டியில் ஓய்வு பெறும் வீரர்களுக்கு அர்ப்பணித்தனர்.

0 comments

Post a Comment