Wednesday, 2 April 2014

சிலியில் பயங்கர நிலநடுக்கம். 5 பேர் பலி!

தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவாகியிருக்கும் இந்த நலநடுக்கத்தில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
earth-8.2-quake-strikes-off-chile
தென் பசிபிக் கடல் ஒட்டிய சிலியில் இக்யூகியூ தீவு பகுதிகள்தான் இந்நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு இந் நிலநடுக்கம் 8 முறை உணரப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 21 கிலோமீட்டர் ஆழம் வரை இந்த நிலநடுக்கம் இருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்து வெளியே வந்தவர்களால் அந்த பகுதி முழுவதும் நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.

இப்பகுதியில் உள்ள எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலநடுக்கம் குறித்து இக்யூகியூ கவர்னர் கோன்சாயோ பிரிட்டோ கூறுகையில், " பலர் காயமுற்றிருக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள பல வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

உயிர்ச்சேதம் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை. பெரு, பொலிவியா நாட்டிலும் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது என்றார்.

அதிபர் பெக்லட் இந்நிலநடுக்கத்தைப் பற்றிக் கூறும்போது, "இந்த பகுதி முழுவதும் பேரழிவை சந்திதுள்ளது. இதற்கான மீட்பு பணிகள் துவங்கியிருக்கிறோம். நாளை அங்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட உள்ளேன் " என்றார்.

இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

0 comments

Post a Comment