Wednesday 30 April 2014

ராட்சத சுறாவிடம் இருந்து மனிதனை காப்பாற்றிய டால்பின் கூட்டம்

அழிந்து வரும் டால்பின்கள் மற்றும் திமிங்கல மீன் வகைகளை காப்பாற்றி, பராமரித்து, பாதுகாப்பதற்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆடம் வால்க்கர் என்பவர் ஆபத்தான கடல் பகுதிகளை நீந்திக் கடந்து, சாகசம் செய்து நிதி திரட்டி வருகிறார்.

நியூசிலாந்தின் கடற்பரப்பில் உள்ள குக்ஸ் ஜலசந்தி வழியாக 16 மைல் தூரத்தை நீந்திக் கடக்கும் சாகச நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நடுக்கடலில் மிக நீளமான ராட்சத வெள்ளை சுறா ஒன்று அவரது காலுக்கு அடியில் நீந்தியவாறு மேல்நோக்கி வருவதை கண்ட ஆடம் வால்க்கர் நிலைகுலைந்துப் போனார்.

suravidam-irunthu-manithari-kappattiray-dolphingal


இன்னும் சில நொடிகளில் நம் கதை முடிந்தது என்று அவர் சிந்தித்து முடிப்பதற்குள், அசுர வேகத்தில் நீந்திப் பாய்ந்து வந்த சுமார் 10 டால்பின்கள் ஆடம் வால்க்கரை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தின.

அவற்றில் ஒன்றிரண்டு, மிரண்டுப் போய் நின்ற ராட்சத சுறாவை ‘இப்ப என்ன பண்ணுவே..? எங்களுக்காக நிதி திரட்ட வந்த நல்லவரையா, போட்டுத் தள்ளப் பாக்குறே..?’ என்ற பாணியில் முறைக்கத் தொடங்கியதும், பயந்துப் போன ராட்சத சுறா, ‘செவிளைக் காணோம்.. இரக்கையைக் காணோம்’ என்று நீந்தி ஓட்டம் பிடிக்க தொடங்கியது.

பாதுகாப்பு அரண் போல டால்பின்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு காப்பாற்றிய காட்சிகள் அவரது படகில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த அரிய சம்பவத்தை வீடியோவுடன் தனது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் ஆடம் வால்க்கர் பதிவு செய்துள்ளார்

0 comments

Post a Comment