Thursday 17 April 2014

சொக்கித்தான் போகிறேன் சுந்தர கிளியே...!


"அவனுக்கு என்னாச்சு...?"

வீரன் கேட்டான்..யாரும் பதில் சொல்லவில்லை..

"டேய்... அவனுக்கு என்னடா ஆச்சு..?"
இப்போது கொஞ்சம் அழுத்தமாக கேட்டான்....

"தெரியலடா...." ஒருவன்.

"உனக்காவது தெரியுமா?"

"ம்ஹூம்....எனக்கும் தெரியாது..."

"மொட்டையா உனக்காவது தெரியுமா?"

"எனக்கொன்னும் தெரியாதுப்பா...."

"சொல்லுங்கடா...இத்தனைப்பேரு இங்க இருக்கீங்க...உங்களுக்கு யாருக்குமே எதுவும் தெரியாதா?"

"ம்ஹூம்..." கோரசாக குரல் வந்தது...

ஆனால் "அவன்" மட்டும் அப்படியே கவிழ்ந்தடித்து படுத்துக் கிடந்தான். வீரனுக்கு டென்சன் எகிறியது.

"ஏண்டா இப்படி படுத்துருக்கிற.. ஏந்தர்றா... ஏந்தர்றா..." உலுக்கினான் வீரன்

படுக்கையில் கிடந்தவன் எழுவதாய் இல்லை.... அவனுடைய நீண்ட சுருள் சுருளான முடிகள்.... காற்றில் அசைந்தது...

அழுத்தமாய் படுத்திருந்தான். அடியில் ஏதோ நோட்டுப் புத்தகம் கிடப்பது போலிருந்தது...

"டேய்..விளையாடாதே...இப்போ நீ எந்திரிக்கல.. நான் உன்னை அப்படியே கட்டிலோட கவிழ்த்து விட்டுவேன்..."

அப்போது அவன் அசைந்து கொடுக்கவில்லை....

இப்ப பாரு என்ன செய்யறேன்னு.....

கட்டிலை தூக்கினான்.  தூக்கும்போது கட்டில் சட்டம்.. "சர்ரென...ட்ட்சடசடென" ஒடிந்தது...கட்டிலோட அவனை தூக்கி கவிழ்த்தான்..

கட்டிலில் கிடந்தவன் மல்லாக்க விழுந்தான்....சலனமே இல்லாமல் கிடந்தவனின் இதழ்கள் மட்டும் புன்னகை பூத்தது...

புரியாமல் தவித்தான் வீரன்.

இப்போது நண்பர்கள் கூட்டத்தில் இலேசான சலசலப்பு..

"அவனுக்கும் சுந்தர வள்ளிக்கும் காதலாம்... அதுதான் அந்த மயக்கமாம்..." நண்பர்கள் கூட்டத்தில் யாரோ ஒருவன்  கிசுகிசுத்தான்.

'காதல் மயக்கமா அவனுக்கு...இருக்கட்டும்..இருக்கட்டும்...' மனதில் நினைத்தவாறே கீழே விழுந்த நோட்டுப் புத்தகத்தை எடுக்கப் போனான்.

காற்றில் படபடத்த தாளொன்றில் எழுதியிருந்தது கண்ணில்பட்டது.

"சொக்கித்தான் போகிறேன் சுந்தரகிளியே.."

1 comments: