Sunday, 30 March 2014

சிம்பு - நயன் சீறும் பிரபுதேவா

சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கிறாங்களா? என்று ஆச்சரியம்மா கேட்ட பிரபுதேவா அது பற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

இயக்குநரும் நயன்தாராவின் முன்னாள் காதலருமான பிரபுதேவா, நயன்தாரா சிம்புவுடன் தன் காதலை முறித்துக் கொண்டபின் பிரபுதேவாவுடன் கல்யாணம் வரை சென்று முறிந்தது.

இந்த காதலுக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார் நயன். சிம்புவுடனான காதல் வெடித்து சிதறியது போல, கல்யாண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார்.
nayantara-prabhudeva-jodi

இதனால் நடிப்பதில் இருந்து சில காலம் விளகி இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பின் நடிக்க வந்த நயன் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம்.

இது குறித்து பிரபுதேவாவிடம் அவரது நண்பர்கள் கேட்டுள்ளனர். என் ரூட்டு வேற, நான் இப்போது மும்பைவாசியாகிவிட்டேன். தமிழ்நாட்டுல என்ன நடந்துக்கிட்டிருக்குன்னு நான் கவனிக்க மாட்டேன்.

யார் கூட யார் நடிச்சா என்ன? என்ன பொறுத்த வரைக்கும் யார் யாரோட நடிக்கிறாங்க. யார் யாரை காதலிக்கிறாங்க என்பது மாதிரியான விஷயங்களை கவனிக்கவே மாட்டேன்.அதை பற்றி தெறிந்துக் கொள்ளும் அவசியமும் எனக்கு இல்லை.

என்னோட கவனம், உழைப்பு சினிமா சினிமாதான். ஹாலிவுட் படம் இயக்கணும் சினிமாவில நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. நெஞ்சை உருகிற மாதிரி அழுத்தமான கதையோட ஒரு படம் பண்ணணும்.

அதே நேரத்துல தி லார்ட் ஆப் ரிங்ஸ், ஸ்பைடர் மேன் மாதிரியும் ஒரு படம் பண்ணணும் என்று இது போல் தன்னுடைய பல கனவுகளை கூறியுள்ளார் பிரபுதேவா.

இதில் மற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள எனக்கு நேரமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

தொடா்ந்து என் படங்களில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதற்கு தனிபட்ட காரணம் எதுவும் இல்லை. என்னோட ஹீரோயின்கள் பக்கா இண்டியன் லுக்கோட இருக்கணும், அதுக்கு சோனாக்ஷி பொருத்தமா இருப்பதால் அவர் நடிக்கிறார்.

நயன்தாராவிடம் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு சிம்புவையாவது மன்னிக்கலாம், ஆனால் பிரபுதேவாவை மன்னிக்க முடியாது என்று நயன்தாரா கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

என்ன நடக்குதுன்னே தெரியல சினிமா உலகத்துல... எல்லாம் அவனுக்கே வெளிச்சம்..!

0 comments

Post a Comment