அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை அஞ்சலி.
தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழி படங்களிலும் நடிக்கத்தொடங்கியிருக்கும் அஞ்சலி, தெலுங்கில் சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். செம ஹிட்டான அந்த படம் தெலுங்கில் அஞ்சலியை பிரபலபடுத்தியது.
சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னையில் தமிழ்ப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவரும் அஞ்சலி, கவர்ச்சி நடிகை ஷகீலாவின் கதையை மையப்படுத்தி வரும் படத்தில் நடிகை ஷஹீலாவாக நடிப்பார் என தகவல்கள் வெளிவந்தன.
தற்பொழுது அந்த தகவலை மறுத்துள்ள அஞ்சலி, ஷகிலாவீன் வேடத்தில் நடித்துதான் நான் திரையுலகில் முன்னேற வேண்டிய நிலை தனக்கு இல்லை என்று ஆவேசமாக கூறியுள்ளார். நிச்சயமாக அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேன்.
சினிமாவில் முன்னுக்கு வருவது எப்படி என்பது எனக்குத் தெரியும். எனவே அதுபோன்ற கேரக்டரில் நடித்துதான் நான் முன்னேற வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று ஆவேசப்பட்டுள்ளார்.
0 comments
Post a Comment