Monday, 17 March 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - சிம்பு

அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. சிறு வயது முதலே எனக்கு சினிமா என்றால் கொள்ளை பிரியம்.

சினிமாவைப் பற்றி எனக்கு A-Z தெரியும். என்னுடைய இந்த 29 வயதிலேயே வாழ்க்கையின் இன்ப துன்பங்களை எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டுவிட்டேன்.

சினிமாவும், பணமும் சேர்ந்தால், நல்லவனைக் கூட கெட்டவனாக மாற்றிவிடும். அதனால் எனக்கு பணம் பிடிக்கவில்லை.. படத்தில்நடிக்கவும் பிடிக்கவில்லை.

சிறுவயதில் எனக்கு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. ஆனால் இப்போது அது பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை..

சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன்.. அதைவிட்டு வேறு ஏதாவது சொல்லும்படி செய்ய வேண்டும் என சிம்பு கூறினார்.

நயன் தாராவுடன் காதல் வயப்பட்ட சிம்பு, அந்த காதல் தோல்வியில் முடிந்தததும் விரக்தியில் இருந்தார். மனித இயல்புதானே அது.

பிறகு ஹன்சிகாவின் வடிவில் பட்டுப்போன காதல் துளிர்விட்டது. ஹான்சிகாவும், சிம்புவும்மாறி மாறி சமூக தளங்களில் தங்கள் காதல் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் வந்த்து. டி.ஆர். கூட அவர்களது காதலை ஏற்றுக்கொண்டுவிட்டதாக கூறினார்கள்.

கடைசியில் வழக்கம்போல காதல் முறிந்துவிட்டது. மிகவும் மனம் நொந்துபோன நிலையிலிருந்த சிம்பு, இப்போது சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறுகிறார்.

நீங்கள் பார்த்து மனது வைத்தால் எதிர்காலத்து உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் ஆக கூட வரலாம் சிம்பு... முயற்சி என்றுமே வெற்றியைத்தான் தரும்...! காதலை துரத்திவிட்டு.. சூப்பர் ஸ்டார் ஆக முயற்சிக்கலாம்...!

ட்ரை பண்ணுங்க.. கலக்குங்க..! வாழ்த்துக்கள்..!

0 comments

Post a Comment