சாதாரணமான வேலைக்கு கூட ஹீரோவுக்கு அசிட்டெண்ட் வச்சி அவரை சோம்பேறியாக்கிடறாங்க..என்ற தொனியில் சினிமா விழாவொன்றில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
தலைவாரி விடுவதற்கு ஒரு அசிட்டெண்ட், முகத்தில் எண்ணைய் வழியாமல் இருப்பதற்கு ஒரு அசிட்டெண்ட்.. சட்டை பட்டன் போட்டுவிட என ஒரு அசிட்டெண்ட் என ஹீரோவை சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட அசிஸ்டெண்ட்கள். இது தேவையா?
தமிழ் சினிமாவில் தயாரிப்புச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் நஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் மேடைக்கும் மேடை முழங்குகிறார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
மேலும் ஒரு படம் ஹிட்டான உடனே சில ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை ‘கோடி’யில் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்றும் ஹீரோக்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் ஹீரோக்களின் இந்த மனம் போன போக்குக்கு தயாரிப்பாளர்கள் தான் முழு முதற்காரணம் என்று வெட்ட வெளிச்சமாக்கினார் ஹீரோ சிவகார்த்திகேயன்.
‘மான் கராத்தே’ ஆடியோ பங்ஷனில் பேசிய சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் நடித்த போது தான் கேட்காமலேயே தனக்கு கிடைத்த சலுகைகளை பட்டியலிட்டு ஹீரோக்கள் மீதான தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டை சந்தி சிரிக்க வைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது :
ஹன்ஷிகா நல்ல நெய்க்குழந்தை மாதிரி கொழுகொழுன்னு இருக்காங்க, எப்படியாவது என்னை ஹன்ஷிகாவுக்கு மேட்ச்சா காட்டணும்னு நெனைச்சு கேமராமேன் சுகுமார் சார் இதுக்குன்னே வெளிநாட்டுக்குப் போய் 20 லைட்டுகளை வாங்கிட்டு வந்தார்.
இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள்ல எல்லாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டெண்ட் மட்டும் தான் இருப்பாங்க. நானே கண்ணாடியை பார்த்துட்டு, முடியை களைச்சி விட்டுட்டு, கேமரா முன்னாடி போய் நின்னுடுவேன்.
ஆனா இப்போ பார்த்தா ஒரு 10 பேர் எங்கூடவே வருவாங்க. இவர் யாருன்னு கேட்டா அவர்தான் உங்களோட முடியை டிஸைன் பண்ணுவாருன்னு சொல்வாங்க, அவரு யாருன்னு கேட்டா அவரு தான் உங்க சட்டை பட்டன்களை எல்லாம் கரெக்ட்டா போட்டு விடுவாருன்னு சொல்வாங்க.
அப்போ இவருன்னு யாருன்னு இன்னொருத்தரை கேட்டா உங்களுக்கு மேக்கப் போட்ட பின்னாடி முகத்துல லைட்டாக்கூட ஆயில் வரம பார்த்துப்பாருன்னு சொல்வாங்க. என்னடா இது நம்மளை ”மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி” பார்த்துக்கிட்டாங்க. இதையெல்லாம் பார்த்தப்போ எனக்கே நல்லாருக்கேன்னு தோணுச்சு. என்றார்.
அப்போ ஹீரோவை சோம்பேறியாக்கிறது தயாரிப்பாளர்கள்தான் சொல்லுங்க சிவகார்த்திகேயன்...!

0 comments
Post a Comment