சத்தியமா சொல்றேன் அமலாபால் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாதுங்க.. ரொம்ப நல்ல பொண்ணுங்க... நிச்சயமாக ஹீரோக்களைப் பற்றி அந்த மாதிரி பேசியிருக்காது.. நம்புங்க" என்று ஒரு மீடியா தம்பதி எல்லா சினிமா ஹீரோக்களிடம் பேசி வருகின்றனர்.
என்ன நடந்தது?
பிரபல பத்திரிக்கைக்கு அமலாபால் கொடுத்த பேட்டியே அவருக்கு ஆப்பு வைத்துள்ளது. தமிழ் திரைபடங்கள் என்றாலே ஹீரோவுக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஹீரோவைச் சார்ந்தே எல்லா ஹீரோயின்களும் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.
உஷாரான தமிழ் சினிமா ஹீரோக்கள் அந்த பொண்ணுக்கு அவ்வளவு திமிரா ? என்ற ரீதியில் இனிமேல் தங்களுடைய படங்களில் ஜோடியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கவனமாக இருக்கின்றனர்.
இதைக் கேள்விப்பட்ட அமலாபால்.. சத்தியா நான் அப்படி எதுவும் சொல்லல.. என்று மீண்டும் ஹீரோக்களிடம் சமாதானப் பேச்சு பேசி ஒட்டிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்வார்கள்... ஆனால் அதிகப்படியாக பேசினால் பொழப்பு நாறிடும் தானே...!
பேட்டி கொடுக்கிறதுக்கு முன்னாடியே இத யோசிச்சிருக்கணும்..!
0 comments
Post a Comment